உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள். அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும். ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில் உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால் சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.