முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புத்தகங்களினால் உண்டாகும் நன்மை

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவரும் நூல் ஆசிரியரே.
 ட்வைனின் புத்தக அறைக்குள் நுழைந்தபோது தரையில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கடுக்காக வைத்திருப்பதைக் கண்டார்.
 ""இவை எல்லாம் உங்களுக்கு பரிசாக வந்த புத்தகங்களா?'' என்று கேட்டார் நண்பர். "ஆமாம்' என்பதுபோல் தலையை அசைத்தார் ட்வைன்.
 ""நமக்கு புத்தகங்களையே பரிசளிக்கிறார்களே ஏன்? புத்தகங்கள் தவிர வேறு ஒன்றும் நமக்குத் தேவை இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ?'' என்றார் நண்பர்.
 ""இருக்கலாம். அதனால் என்ன புத்தகங்கள் என்றாலே எனக்குப் பிரியம் அதிகம். உதாரணமாக இதோ இந்தக் கனமான புத்தகங்களைப் பாருங்கள். என் வீட்டில் தொல்லை தரும் பூனைகள் மீது விட்டெறிய இவற்றை விடச் சிறந்த பொருள் வேறு கிடையாது. சிறிய புத்தகங்களை மேஜை, நாற்காலிகளின் கால்களுக்கு அடியில் வைத்தால் அவை ஆடாமல் அசையாமல் இருக்கும்.
 இதோ இருக்கிறதே தோல் பைண்டு செய்த புத்தகம். இதிலே
 சவரக் கத்தியை சுகமாகத் தீட்டலாம். ஆகையால் புத்தகம் அருமையான பொருள். அவற்றை யாரும் எனக்கு நிறையத் தரமாட்டேன் என்கிறார்களே. அதுதான் என் மனக்குறை!'' என்றார் ட்வைன் சிரித்தபடி.

முழு கட்டுரையைப் படிக்க →