ஞாயிறு கொண்டாட்டம்

வடிவேலு இல்லாத குறையை அறிய முடிகிறது!

'பப்பாளி'... படத்தின் தலைப்பே கவனம் ஈர்க்கிறது. 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'வெடிகுண்டு முருகேசன்' என தன் முந்தைய படங்களில் காட்சிக்கு காட்சி காமெடி பேக்கேஜ் கட்டிய இயக்குநர் கோவிந்த மூர்த்தியின் அடுத்த படைப்பு இது. 'படித்துறை' பாண்டி, 'அலர்ட்' ஆ

ஜி. அசோக்

'பப்பாளி'... படத்தின் தலைப்பே கவனம் ஈர்க்கிறது. "கருப்பசாமி குத்தகைதாரர்', "வெடிகுண்டு முருகேசன்' என தன் முந்தைய படங்களில் காட்சிக்கு காட்சி காமெடி பேக்கேஜ் கட்டிய இயக்குநர் கோவிந்த மூர்த்தியின் அடுத்த படைப்பு இது. "படித்துறை' பாண்டி, "அலர்ட்' ஆறுமுகம் என வடிவேலுவின் கலைப் பயணத்தில், தொடர்ந்து சிரிப்பொலி கேட்கும் கதாபாத்திரங்களை வடிவமைத்த இயக்குநர்.
 ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கலாம்.... என்றால், ""எந்த இடத்துக்கு எப்போ வர்றீங்க...'' என பதில் பேசுகிறார். சென்னை சாலிகிராமத்து சாலைகளில் நடந்தது படப்பிடிப்பு...
 படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு இல்லாத குறையை அறிய முடிகிறது. சிங்கம்புலி, ஜெகன், இளவரசு என கதாபாத்திரங்களை உணர்ந்து நடிக்கும் நடிகர்களை வைத்து வடிவேலு இல்லாத குறையை நிவர்த்தி செய்து கொண்டிருந்தார் இயக்குநர் கோவிந்த மூர்த்தி. படப்பிடிப்பு ஏரியாவுக்குள் போனது
 தெரிந்ததும், படபடப்புடன் கைப்பிடித்து பேச துவங்கினார் கோவிந்த மூர்த்தி:
 "'ஆமாங்க... வடிவேலு சார் இல்லாதது பெரிய குறைதான். என் வருத்தமும் அதுதான். வடிவேலு சாரை மனதில் வைத்துதான் இந்த கதையை எழுதினேன். என் முந்தைய இரு படங்களிலும் காட்சிக்கு காட்சி காமெடி இருந்தாலும், சின்ன சின்னதாக மனசை தொடுகிற காட்சிகள் வைத்திருப்பேன். இந்தப் படம் அப்படியல்ல... காமெடி காட்சிகளுக்குள்தான் கதையே பயணமாகும். கதையை எழுதி விட்டு, வடிவேலு சாரை பார்த்து ""நீங்கதான் சார் நடிக்கணும்...''ன்னு கேட்க ஆசைதான். தேர்தல் பரபரப்பு, அரசியலுக்கு பின் வந்த அமைதி என அவரை பார்க்கவே முடியவில்லை. போனில் பிடித்தாவது கதை சொல்லலாம் என்றால், தொடர்பு எல்லையிலேயே அவர் இல்லை. அதனால்தான் அவர் இப்போது இந்த இடத்தில் இல்லை.'' என்றவர் பக்கத்தில் வந்த சிங்கம்புலியைப் பார்த்து மேலும் பேச தொடங்கினார்.
 ""வடிவேலு சார் இல்லாத இடத்துக்கு சிங்கம் புலி அண்ணன்தான் கைகொடுத்தார். கூடவே, ஜெகன், இளவரசு சார் என பக்கா காமெடி பேக்கேஜுக்கு ஆள்கள் ரெடி. அதனால்தான் பயம் இல்லாமல் ஷூட்டிங் வந்து விட்டேன்'' என வடிவேலு இல்லாத கராணத்தை விளக்கினார்.
 கதை என்ன...? பெரிதாக ஜொலிக்காத மிர்சி செந்தில்.... புதுமுகம் இஷாரா... இவர்களின் ஸ்பரிஸங்களைப் பார்க்கும் போது காதலையும் உணர முடிகிறதே...? என்றால்... "" காதல் சின்ன பகுதிதான். ஆனால் கதை சூப்பராக இருக்கும். ஆனால் எந்த புதுமையும் இருக்காது. ரொம்ப சிம்பிளான கதை.. சென்னையில் கையேந்தி பவன் வைத்திருக்கிற ஒருவரோட பையன், படிச்சு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக ஆசைப்படுகிறான். ஆனால் அவன் அப்பாவோ நான்தான் கடைசி வரைக்கும் பிளாட்பாரக் கடையிலேயே வாழ்ந்து விட்டேன். என் பையனாவது ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். இந்த கதைக்கு இடையில் தவிர்க்க முடியாமல் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் வருகிறது. வெளிப்படையாக சொன்னால் படத்தில் 15 நிமிஷம் மட்டும் சீரியஸôக இருக்கும். மற்ற இடங்களில் எல்லாம் காமெடி மட்டும்தான்...''
 கோவிந்த மூர்த்தி பேசி முடித்ததும் தன் கீச்.. கீச்... குரலில் பேசத் துவங்கினார் சிங்கம்புலி. ""டைரக்டர் தம்பி கதையை சொல்லி முடித்ததுமே, எனக்கு பெரிதாக நடுக்கம் இருந்தது. ""வடிவேலு அண்ணன் நடிக்க வேண்டிய இடத்தில் நான் எப்படி தம்பி...?''ன்னு கேட்டு விட்டேன். ""அப்படி இல்ல அண்ணே... எல்லாம் சரியாக அமைந்தால், இந்த காமெடி நல்ல இடத்துக்கு போகும்ன்னு தம்பி நம்பிக்கை வார்த்தை சொன்னுது...''. அதனால்தான் நடிக்க வந்தேன். நம்ம ஜெகன், இளவரசு அண்ணன் எனக்கு பக்க பலம்.''
 ""ஒவ்வொரு படத்துக்கும் ஒரு மைலேஜ் இருக்கும். மூர்த்தி தம்பி படத்தை பற்றி நாம் வேறு எதுவும் நினைத்து விட வேண்டாம். அவருக்கு நிச்சயம் ஆக்ஷன் படம் எடுக்க தெரியாது. எதார்த்தமான காமெடி மூர்த்திக்கு கை வந்த கலை. அது இதில் சரியாக வந்திருக்கிறது'' என்று பக்கத்தில் இருந்த இளவரசு, ஜெகன் இருவரும் ஒரே குரலில் சிங்கம்புலியின் வார்த்தைகளை ஆமோதித்து பேசினார்கள்.
 ஹீரோ, ஹீரோயின் பற்றி எதுவுமே பேசவில்லையே....? என்றால்... மிர்சி செந்தில் உங்களுக்கு தெரிந்த நடிகர். "சரவணன் மீனாட்சி' தொடருக்கு நான் பெரிய ரசிகன். அதனால் அப்படியே அந்த நடிப்பை இதில் எடுத்து வந்திருக்கிறேன். கேரளா பொண்ணு இஷாரா.. இதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்தாலும், நல்ல அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிற பொண்ணு. இரண்டு பேருமே நம்பிக்கையாக இருக்காங்க'' என்கிறார் கோவிந்த மூர்த்தி.
 கதை சரி... காமெடியும் சரி...படத்தின் டாப்பிக்கல் சப்ஜெக்ட் என்ன...? என்றதும் லேசான தாடி கோதி பேசுகிறார் மூர்த்தி. ""எல்லா குடும்பங்களிலும் காலம் காலமாக நடக்கிற விஷயம்தான். தாத்தாவின் நிறைவேறா ஆசை. அப்பா மேல் விழும். அப்பாவின் லட்சியங்கள் மகன்கள் மீது திணிக்கப்படும். இது தினமும் எங்கேயோ, யாருக்கோ நடந்துக் கொண்டே இருக்கும். இந்த சப்ஜெக்ட் எப்போதுமே டாப்பிக்கல்தான். மகனின் பெயருக்கு பின்னால் கல்யாணப் பத்திரிகையில் போட வேண்டும் என்பதற்காக கடனுக்கு படிக்க வைத்து விட்டு, அதன் பின் கடைக் கல்லாவிலேயே உட்கார வைக்கிற அப்பாக்கள் இங்கே அதிகம். மகன்களின் ஆசையையும் காது கொடுத்து கேட்க வேண்டும். திட்டும் போது கூட பாசிட்டிவாக திட்ட வேண்டும். இதுதான் படத்தில் சொல்ல வரும் மெசேஜ்'' என்றார்.
 ஹை நல்லாயிருக்கே!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச. 22ல் பியூஷ் கோயல் சென்னை வருகிறார்!? கூட்டணி முடிவு எட்டப்படுமா?

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

SCROLL FOR NEXT