ஞாயிறு கொண்டாட்டம்

மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்!

காரைக்காலில் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும், காரைக்கால் தலத்தெரு

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும், காரைக்கால் தலத்தெரு பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகன் ராஜேஷ்கண்ணன், சிறு வயது முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்த தபால் தலைகள், நாணயங்களை சேமித்து வைத்திருக்கிறார். அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

""இன்றைய சிறுவர்கள், இளைஞர்களுக்கு தபால் பயன்பாடு குறித்து ஓரளவே தெரிகிறது. எந்தெந்த காலகட்டத்தில் தபால் தலை, எந்த நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது, தபால் தலைகள் வெளியிட்ட நாடுகள் குறித்து அறிந்துகொள்ள, அதைச் சேமிக்கும் எண்ணமும் 6-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எனக்கு ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்கள் மூலமாகவும், உள்ளூரில் உள்ள நண்பர்கள் மூலமாகவும் 2300 எண்ணிக்கையில் தபால் தலை சேகரித்துள்ளேன். இவை இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஸ்ரீலங்கா, வியத்நாம், துபை, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிரேஸில் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 100 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த தபால் தலைகளைச் சேகரித்துள்ளேன்.

இதேபோன்று பல்வேறு நாடுகளில் இதே காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த நாணயங்களையும் சேகரித்துள்ளேன். எனது சேகரிப்பை கண்காட்சியாக வைத்து விளக்கவும் தயாராக இருக்கிறேன். இன்னும் கிடைக்காத நாடுகளில் இருந்து தபால் தலைகளை சேகரிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறேன்'' என்கிறார் ராஜேஷ்கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT