ஞாயிறு கொண்டாட்டம்

"டபுள் மீனிங் டயலாக்கை' ரசிப்பவர்கள்  ஆபத்தானவர்கள்!

வெகுநாளாகவே கரு.பழனியப்பனை பார்க்க முடியவில்லை. ""சில மாதங்கள் கேரளத்தில் வாசம். அங்கேயே இருந்து தங்கி, படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறேன். அதுதான் எங்கும் பார்க்க முடியவில்லை...'' என்றபடி சிநேக சிரிப்புடன் வரவேற்கிறார் கரு.பழனியப்பன்.

ஜி. அசோக்

வெகுநாளாகவே கரு.பழனியப்பனை பார்க்க முடியவில்லை. ""சில மாதங்கள் கேரளத்தில் வாசம். அங்கேயே இருந்து தங்கி, படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறேன். அதுதான் எங்கும் பார்க்க முடியவில்லை...'' என்றபடி சிநேக சிரிப்புடன் வரவேற்கிறார் கரு.பழனியப்பன்.
 "ஜன்னல் ஒரம்'னு தலைப்பே ஈர்க்குதே... கதை என்ன?
 "ஆர்டினரி'ன்னு மலையாளப் படம் பார்த்தேன். சின்ன சின்ன சம்பவங்களைத் தொகுத்து அது கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. படம் ஆரம்பித்த அடுத்த சில விநாடிகளில் அதற்குள் போய் விட்டேன். இரண்டு நாள்கள் ஆகியும் அதற்குள் இருந்து வெளிவர முடியவில்லை. நண்பர்கள் சிலருக்கு போன் போட்டு, "ஆர்டினரி' பற்றி பேசினேன். பெரிதாக யாருக்கும் தெரியவில்லை.
 ஒரு நல்ல படத்தை நம்ம மக்களும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதைத்தான் அப்படியே எடுத்து வருகிறேன். ஒரு பயணம், அது அமைத்து கொடுக்கிற சூழ்நிலை, அதில் பங்கேற்ற மனிதர்கள் என கதை போகும். பழனிக்கும் கொடைக்கானல் பக்கத்தில் இருக்கிற பண்ணைக்காடுக்கும் இடையே நடக்கிற ஒரு பேருந்து பயணம். அதில் கொண்டாட்டமான மனிதர்களும் இருப்பாங்க. கவலை தோய்ந்த முகங்களுடன் சிலர் இருப்பாங்க. அப்படியென்றால் இதில் இருக்கும் வாழ்க்கை உங்களுக்கும் புரியும்.
 உங்கள் தன்னம்பிக்கை எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.... இருந்தும், இப்போது ரீமேக் படத்தை இயக்க வேண்டிய அவசியம் என்ன...?
 என் எல்லா படங்களும் ரீமேக்தான். அவற்றையெல்லாம் சொல்லாமல் செய்தேன். இதை வெளிப்படையாகச் சொல்லி விட்டு செய்கிறேன். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது. இங்கே யாரும் சுயம்பு இல்லை. நானும் அப்படித்தான். சில படங்களின் பாதிப்பு, பார்த்த சம்பவங்களின் வலி, வாழ்ந்த வாழ்க்கை இதைத்தான் சினிமாவாக்க முடியும். இதை மீறி எதையும் இங்கு சொல்லி விட முடியாது. அப்படித்தான் நானும். எப்போதுமே சாதாரணமான கதையைப் படமாக்குவதில்தான் பெரிய கஷ்டம் இருக்கிறது. அதுதான் சவாலும் கூட.
 பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, பூர்ணா, மனிஷா யாதவ், மோனிகா.... இவ்வளவு நட்சத்திரங்களை, வேலை வாங்குவது கஷ்டம்தானே..?
 பார்த்திபன் சாருக்கு என் மேல் அவ்வளவு அன்பு. சினிமா கிறுக்கில் சென்னை வந்து சுற்றாத இடங்கள் எல்லாம் சுற்றி நின்ற பின், அவர்தான் என்னை சேர்த்துக்கொண்டார். நான் இயக்குநரானதில் அவருக்கு மகிழ்ச்சி. மற்ற நடிகர்களை வைத்து நான் வேலை வாங்குவதை, தூரத்தில் இருந்து ரசித்து பார்ப்பார்.
 விமலின் படம் ரிலீசாகிற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் என் கூடவே இருந்திருக்கிறார். இரண்டு படம் ஹிட். இரண்டு படம் அவுட். இருந்தாலும் அவரிடம் எதுவுமே தெரியவில்லை. வெற்றி, தோல்விகளைத் தலையில் ஏற்றிக் கொள்ளாத கலைஞன் விமல். விதார்த் நல்ல நடிகன். இயக்குநர்கள் அவரிடம் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல படங்களைக் கொடுக்கலாம். "பூர்ணாவிடம் 500 ஆண்டு அழகு இருக்கிறது' என்பார் பார்த்திபன் சார். அப்படியே அந்த அழகை கொண்டு வந்திருக்கிறேன். மாடர்ன் பொண்ணு மனிஷாவுக்கு மேக்கப் கிடையாது. உண்மையில் இது எனக்கு புது அனுபவம். கதாநாயகன், கதாநாயகி என படத்தில் யாரும் கிடையாது. ஒவ்வொரு சம்பவங்களுக்கான பாத்திரங்கள்தான் எல்லோரும்.
 வித்யாசாகர்தானே எப்போதும் உங்களுக்கு ஃபேவரைட்...?
 நல்ல விஷயம்தானே. எங்களுக்கான புரிதல் அற்புதமானது. எங்கள் காம்பினேஷனை ரசிகர்கள் விரும்புகிறார்கள். அது போலவே, யுகபாரதியும்.
 "மந்திரப் புன்னகை' திருப்தி தராமல் போனதற்கு என்ன காரணம் என யோசித்தீர்களா....?
 நான் யோசிக்க வேண்டியது இல்லை. இப்போது பார்க்கிற பலரும் சார் அது நல்ல படம்ன்னு சொல்றாங்க. அவர்களிடம் போய் நான் என்ன சொல்ல முடியும்? உலக சினிமாப் பக்கம் போய் பார்த்தால் நாம நினைக்கிற சினிமா வேறு மாதிரி இருக்கிறது. சினிமா வளர வேண்டும் என்றால் புதிய முயற்சிகள் நிறைய வேண்டும். நட்பாக இருக்கிற இயக்குநர்களிடம் பேசும் போது, அவர்கள் எடுக்க தயங்குகிற நல்ல கதைகள் நிறைய இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே எல்லோரிடமும் ஒரு வித பயம் இருக்கிறது. டபுள் மீனிங் டயலாக்தான் காமெடியென நினைக்கிற கலைஞர்களும், அதை ஆதரிக்கிற ரசிகர்களும் ஆபத்தானவர்கள்.
 ரசித்து ரசித்து எடுக்கிற சில படங்கள் தோல்வியடையும் போது உங்கள் மன நிலை எப்படியிருக்கும்...?
 நல்ல சினிமா காலத்தை தாண்டியும் பேசப்படும். கெட்ட சினிமா வந்த சுவடே தெரியாமல் போய் விடும். இதில் எதாவது ஒன்றுதான் நடக்கும். உலகில் எங்கோ என் சினிமாவை நேசிக்கும் ஒற்றை ரசிகன்தான் பலம்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT