முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஜில்...ஜில்...ஜல்ஜிரா!

உச்சி மண்டை உருகும் அளவுக்கு கத்திரி வெயில் ஆரம்பிச்சாச்சு. இது இந்த மாதம் 28 ஆம் தேதி வரை உள்ளது. ""காலையில் 8 மணிக்கே வெயில் பல்லைக் காட்டுது.

Updated On : 12 மே 2013, 10:05 am IST
பகிர்:

உச்சி மண்டை உருகும் அளவுக்கு கத்திரி வெயில் ஆரம்பிச்சாச்சு. இது இந்த மாதம் 28 ஆம் தேதி வரை உள்ளது. ""காலையில் 8 மணிக்கே வெயில் பல்லைக் காட்டுது. வீட்டை விட்டு வெளியே வரவே பயமாயிருக்கு'' என்று பலரும் புலம்புகிறார்கள். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் பல்வேறு முறைகளைக் கையாள்வோம். கோடைக் காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு உதவியாக முதலில் வருவது நீரும், நீர் சார்ந்த பானங்களும் தான். அடுத்து பழச்சாறுகள். இளநீர் ஆகியவை. இப்படி இயற்கை நமக்கு அளித்ததை பயன்படுத்தி பல பானங்களைத் தயாரித்து அருந்தலாம். வட இந்தியாவில் கோடையைச் சமாளிக்க சில பானங்கள் தயாரிப்பார்கள். அவற்றில் ஒன்று "ஜல்ஜிரா'. இதைத் தயாரிப்பது ரொம்ப சுலபம், தாகத்தையும் தணிக்கும். இதை தயாரிப்பது எப்படி?
 2 ஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடித்து வைக்கவும். 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை அரைத்த விழுது, நெல்லிக்காய் அளவுள்ள மாங்காய் அரைத்த விழுது, 2ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிய துண்டு இஞ்சி அரைத்த விழுது, தேவைக்கேற்ப கல் உப்பு, சர்க்கரை இவற்றை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். அதில் 5 கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது ஜல்ஜிரா ரெடி. இதில் சிறிது புதினா இலையை மேலே தூவி அருந்தவும். தேவையானால் குளிர்
 சாதனப் பெட்டியில் வைத்தும் அருந்தலாம்.
 இது நமது ஆரோக்கியத்தையும், இந்த கத்திரி வெயிலையும் சமாளிக்க மிகவும் உதவும்.
 கா. ராஜம், சென்னை
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.