ஞாயிறு கொண்டாட்டம்

ஆரோக்கிய சமையல்

நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, வெட்டிக் கொள்ள வேண்டும்.

சுவாதி

மீல் மேக்கர் வடை

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 1 கிண்ணம்

கடலை மாவு - 1 கிண்ணம்

சோள மாவு - 1 மேசைக் கரண்டி

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

மட்டன் மசாலா - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிது (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)

சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி

சீரகப் பொடி - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை: முதலில் மீல் மேக்கரை சுடு

நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ள வேண்டும். பின் மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியில் இந்தக் கலவையை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை ரெடி.

காளான், பேபிகார்ன் சில்லி

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 1 கிண்ணம் (நறுக்கியது)

பேபி கார்ன் - 1 கிண்ணம் (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி

சோள மாவு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - அரைக் கிண்ணம்.

செய்முறை: முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பேபி கார்னையும் நீரில் கழுவி, நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் பேபி கார்னைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, காளான், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 5-7 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்னர் அத்துடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தட்டை வைத்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT