முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பாட்டி சமையலைக் கற்றுக் கொள்ளுங்கள்!

பெண்களின் உலகம் இப்போது நிறையவே மாறிவிட்டது. வீடும் வீடு சார்ந்ததுமாக இருந்த அவர்களின் உலகம், படிப்பு, வேலை என்று மாறிவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

பெண்களின் உலகம் இப்போது நிறையவே மாறிவிட்டது. வீடும் வீடு சார்ந்ததுமாக இருந்த அவர்களின் உலகம், படிப்பு, வேலை என்று மாறிவிட்டது. எப்படிச் சமையல் செய்வது? என்று தெரியாமல் இருக்கும் இளம்பெண்கள் நிறைய. அவர்களுக்கு இப்போது பயன்படுபவை சமையல் புத்தகங்கள். நூற்றுக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் சமையல் புத்தகங்களில் மிகவும் வேறுபட்டு, தனித்தன்மையுடன் இருக்கின்றன சபிதா ராதாகிருஷ்ணாவின் சமையற்கலைப் புத்தகங்கள். இப்போது வந்திருக்கும் புத்தகம் "அசசஅடமதசஐ'.

சபிதா ராதாகிருஷ்ணா சமையற்கலை புத்தகங்களை எழுதுபவர் மட்டும் அல்ல. இதழாளர். அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் எழுதியவர். நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியவர். அகில இந்திய கிராஃப்ட் கவுன்சிலில் உறுப்பினர்.

அவர் சமையற்கலைப் புத்தகங்களை எழுத வந்தது எப்படி? நமது சமையலின் சிறப்புத் தன்மைகள் எவை?

என்பதைப் பற்றியெல்லாம் நம்மிடம் சொன்னார்:

""1961 இல் எனக்குப் பதினெட்டு வயது. திருமணமாகி போபாலில் இருந்தேன். நானே சமையல் செய்ய வேண்டிய கட்டாயம். பெங்களூருவில் இருந்த அம்மா எழுதிய சமையல் குறிப்புக் கடிதங்கள் வந்து சேர ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். அம்மா அனுப்பிய சமையல் குறிப்புகளை எல்லாம் ஒரு டைரியில் எழுதி வைத்தேன். அதற்குப் பிறகு அம்மா என்னுடன்தான் இருந்தார். அவர் சொல்வதைக் கேட்டுக் கேட்டு நன்றாகச் சமைக்கக் கற்றுக் கொண்டேன்.

என்னைப் போன்று எத்தனை பெண்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கும்? கல்லூரிப் படிப்பு, படித்து முடித்ததும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உள்ள பெண்கள் என்ன செய்வார்கள்?

அம்மாவிடம் கேட்டது, கற்றுக் கொண்டது எல்லாவற்றையும் அடிப்படையாக வைத்து என்னுடைய முதல் சமையற்கலைப் புத்தகம்

அஏஅதஅங வெளிவந்தது. அந்தப் புத்தகம் இதுவரை பல பதிப்புகள் வந்துவிட்டன. 60 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுவிட்டன. என்றாலும் இன்று வரை அதைக் கேட்டு வாங்குபவர்கள் அதிகம்.

அதற்குப் பிறகு புதிதாகத் திருமணமான இளம் பெண்களுக்கு உதவும் வகையில் பஏஉ ணமஐஇஓ இஞஞஓ என்ற புத்தகத்தை எழுதினேன். 1 மணி நேரத்தில் சாம்பார், பொரியல், ஒரு கூட்டு ஆகியவற்றை எப்படிச் செய்வது என்று அந்தப் புத்தகத்தில் வழிகாட்டியிருந்தேன்..

ஒன்றை இளமையிலேயே கற்றுக் கொடுத்துவிட்டால் அது நன்கு பதிந்துவிடும். எனவே குழந்தைகளுக்காக ஓஐஈந ஓஐபஇஏஉச என்ற சமையல் புத்தகத்தை எழுதினேன். 9 - 14 வயதுக் குழந்தைகள் அந்தப் புத்தகத்தைப் பார்த்து சமைக்க முடியும். அதுமட்டுமல்ல, அந்தப் புத்தகத்தில் இடைஇடையே பொருத்தமான குட்டிக் கதைகளையும் சேர்த்து இருந்தேன். உதாரணமாக பாலைப் பயன்படுத்திச் செய்யும் உணவுப் பொருட்களைச் சமைக்கும் முறையைச் சொல்லும் பகுதியில், கிருஷ்ணன் வெண்ணெய் திருடித் தின்றது, அந்த வெண்ணெய் எப்படி உடலுக்கு நல்லது என்பதை சொல்லும் கதையை இணைத்திருந்தேன். அந்தப் புத்தகத்துக்கு குழந்தைகளிடம் இருந்து மட்டுமல்ல, பெரியவர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு.

இப்போது வெளிவந்திருக்கும் புத்தகம் அசசஅடமதசஐ. இது தமிழ்நாட்டின் உணவு வகைகளை எப்படிச் சமைப்பது? என்று சொல்லும் புத்தகம். தமிழ்நாட்டுச் சமையல் என்று சொன்னாலும் அதிலும் பல பிரிவுகள் இருக்கின்றன. முதலியார் வீட்டுச் சமையல், கிறிஸ்தவ வெள்ளாளர் வீட்டுச் சமையல், ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களின் சமையல்,

கொங்குநாட்டுச் சமையல், தமிழ் முஸ்லிம் மக்களின் சமையல், கோயம்புத்தூர் நாயுடு சமையல் எனத் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணவுகளைச் சமைக்கும் முறைகளைச் சொல்லித் தருவதுதான் இந்தப் புத்தகம். இவ்வாறு பலவிதமான சமையல்களைப் பற்றி எழுதுவதற்கு நான் நிறைய முயற்சிகள் செய்வது வழக்கம்.

ஒருமுறை கொங்கு நாட்டு உணவுத் திருவிழா ஒன்று நடந்தது. நான் அங்கே சென்று அங்குள்ள சமையல்காரர்களைச் சந்தித்து, சில உணவுப் பொருட்களை எப்படிச் செய்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவற்றை வீட்டில் செய்து பார்த்தேன். சந்தேகம் எதுவும் வந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

அன்வர் என்ற நண்பரின் வீட்டுக்குச் சென்று தமிழ் முஸ்லிம்களின் சமையலைக் கற்றுக் கொண்டேன். பெங்களூருவில் என்னுடைய அப்பா டாக்டராக இருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஆங்கிலோ இந்திய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூலமாக அவர்களுடைய சமையலைக் கற்றுக் கொண்டேன். இவ்வாறு பலரிடம் இருந்து நான் தெரிந்து கொண்ட சமையல் செய்யும் முறைகளை நானே செய்து பார்த்து அதை மேலும் சிறப்பாக எப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்வேன். அவ்வாறு தெரிந்து கொண்டதைத்தான் அசசஅடமதசஐ இல் எழுதியிருக்கிறேன்.

நமது நாட்டுச் சமையற்கலை அழிந்துவிடாமல் இருக்க அவற்றை இவ்வாறு புத்தகங்களில் பதிவு செய்வது அவசியம். அதிகமாகச் சாதம் சாப்பிடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. அதனால்தான் நமக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் வருகின்றன. சாதத்தைக் குறைவாகவும், காய்கறிகளை, கீரைகளை அதிகமாகவும் சாப்பிட்டால் நோய்கள் வரவே வராது.

நம் ஊரில் தேங்காய் அதிகம். அதனால் நமது உணவில் தேங்காயை அதிகம் சேர்த்துக் கொள்கிறோம். உணவில் தேங்காய் சேர்த்துக் கொண்டால் பாதிப்பில்லை என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பருப்பு சாப்பிடும்போது ஒரு துளி நெய் சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு நல்லது. இரத்த அழுத்தம், இதயக் கோளாறு உள்ளவர்கள் உப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.

நமது உணவில் நாம் சேர்க்கும் மஞ்சள் புற்றுநோயைத் தடுக்கக் கூடியது. நன்றாக உணவு செரிக்க இஞ்சி உதவும். பூண்டு இரத்த அழுத்தத்தைத் தடுக்கக் கூடியது. உடலில் அதிகம் கொழுப்புச் சத்து சேராமல் தடுத்துவிடும்.

இப்போது ஊகஅல நஉஉஈ (ஆளிவிதை) உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது என்று சொல்கிறார்கள். அதை லேசாக வறுத்துப் பொடி செய்து இட்லிக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி எளிதில் நரைக்காது. இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ள நமது உணவைச் சமைப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்கே புத்தகங்களை எழுதுகிறேன்.

இப்போது ஆங்கில வழிக் கல்வி பயில்வது அதிகமாகிவிட்டதால், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எனது சமையல் புத்தகங்களை எல்லாரும் வாங்கிச் செல்கிறார்கள்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →