ஞாயிறு கொண்டாட்டம்

மேனி அழகை பாதுகாக்கும் அழகுக் குறிப்புகள்

* தினம் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால், மேனியின் நிறம் மேன்மைப்படும்; மேனி அழகு பெறும்.

தவநிதி

• தினம் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால், மேனியின் நிறம் மேன்மைப்படும்; மேனி அழகு பெறும்.

• பூசணி விதையை அரைத்து முகத்திலும், மேனியிலும் பற்றுப்போட்டு, அப்பற்று உலர்ந்தபின் குளிர்ந்த நீரில் கழுவ, சரும நோய்கள் குணமாவதுடன், மேனியும் அழகு பெறும்.

• பொன்னாங்கன்னிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், மேனி அழகு பெறும்.

• சோறு வடிக்கும் கஞ்சியைத் தேவையான அளவு எடுத்து, அத்துடன் தேன் சிறிது கலந்து உடல் முழுவதும் தடவி, சிறிது உலர்ந்தபின் குளித்தால், மேனி அழகு மேன்மைப்படும்.

• கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி, அது உலர்ந்த பின் குளித்தால், மேனி அழகு பெறும்.

• பெண்களின் அழகான தோற்றத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுவது ஆரோக்கியமான உடல்தான். நரம்புகளின் பலத்தையும், தசைகளின் பலத்தையும் பாதுகாத்துப் பராமரிக்க ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

• உங்களுடைய உடல் ஆரோக்கியமற்றதாக இருந்தால், நீங்கள் எவ்வளவுதான் விலை அதிகமான அல்லது அபூர்வமான களிம்புகளையும், க்ரீம்களையும் பயன்படுத்தினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT