முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

காதலின் புது அடையாளம்!

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் பேசி முடிக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன்-மனைவி சேர்ந்து வாழ பணம்தான் அவசியம் என்று கூறும் பெரும்பான்மையினர் மத்தியில், "காதலனோடு சந்தோஷமாக

Updated On : 7 நவம்பர், 2017 at 9:23 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:34 PM

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் பேசி முடிக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன்-மனைவி சேர்ந்து வாழ பணம்தான் அவசியம் என்று கூறும் பெரும்பான்மையினர் மத்தியில், "காதலனோடு சந்தோஷமாக வாழ்வதற்குப் பணமே தேவையில்லை' என்று இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைத் துச்சமாக உதறித் தள்ளியிருக்கிறார் புரட்சிக் காதலி ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ. ஏஞ்சலினின் தந்தை "கூ கே பெங்' மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெரும் கோடீஸ்வரர். இவருக்குச் சொந்தமாக நட்சத்திர விடுதிகள், மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவரது சொத்து மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் இது ஏறத்தாழ ரூ. 2000 கோடி.
ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ இங்கிலாந்தில் படித்து வந்தார். அப்போது அங்கே பழக்கமான ஜடிஹா ஃபிரான்சிஸ் என்ற டேட்டா சயின்டிஸ்ட் உடன் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கூ கே பெங் தனது மகள் ஒரு டேட்டா சயின்டிஸ்டை திருமணம் செய்ய விரும்புவதை ஏற்கவில்லை.
மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மொத்த குடும்பமும் காதலுக்கு எதிராக நின்றது. ஆனால் காதலா, குடும்பமா என்ற போராட்டத்தில், ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ காதலனின் கரம் பிடிக்க முடிவு செய்தார்.
இந்த காதல் திருமணத்தால் தனது பரம்பரை சொத்தான ரூ.2000 கோடிகளை இழக்க வேண்டும் என்று தெரிந்தும், பணத்தை விட தனது காதலனே முக்கியம் என ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ உறுதியாக முடிவெடுத்தார். இதனால் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ தற்போது காதலின் புதிய அடையாளமாக மாறியிருக்கிறார். மலேசியாவின் பெரிய செல்வந்தர் மகளான ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூ -வின் திருமணம் வெறும் 1500 பவுண்டுகள் செலவில் நடந்தது. இருவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர். வெறும் 30 பேர் முன்னிலையில் பெம்ப்ரோக் கல்லூரி தேவாலயத்தில் இந்த திருமணம் எளிமையாக நடைபெற்றது. 
""எனது தந்தையின் கருத்து தவறானது. எது சரி என்ற கேள்விக்கு, என் மனம் காதலே என பதிலளித்தது. பல கோடி பணம் இழப்பது குறித்த மனவருத்தம் ஏதும் இல்லை. நான் சிக்கனமாக வாழக் கற்றுக் கொண்டுள்ளேன்'' என ஏஞ்சலின் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.