ஞாயிறு கொண்டாட்டம்

இகோர் இயக்கும் வகிபா

"கலாபக் காதலன்', "தேன்கூடு', "வந்தா மல'  உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இகோர்.

DIN

"கலாபக் காதலன்', "தேன்கூடு', "வந்தா மல'  உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இகோர். இவர் அடுத்து இயக்கி வரும் "வகிபா'. இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாக வைக்கப்பட்டுள்ளது. பிலிம் பூஜா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்கரண்,  மனிஷாஜித்,  மகேந்திரன்,  கஞ்சா கருப்பு, வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  இகோர் பேசும் போது... ""அலுவலகமோ, சமூகமோ என எந்த இடமாக இருந்தாலும் ஜாதி பார்த்து பழகும் சூழல் உருவாகியுள்ளது.  தனி மனிதன் அவனின் ஜாதியை மறைத்து வாழ்கிறான். ஆனால், அவன் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் எனத் தெரிய வரும்போது அவனது வாழ்க்கை  குழம்புகிறது.  பாரதி என்னும் இளைஞன் வண்ணக்கிளி என்னும் பெண்ணைக் காதலிக்கிறான், அவன் காதலுக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி வாழ தொடங்கும்போது  ஜாதி வெறி அந்த அப்பாவி காதலர்களை எப்படி விரட்டுகிறது இதுதான் கதை'' என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT