முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஞானப்பழம்

ஞானியிடம் ""பழங்களில் ஞானப்பழம் எது'' என்று கேட்டார்கள். "பலாப்பழம்' என்று சட்டென்று அவரிடமிருந்து பதில் வந்தது. ""எப்படி? வாழ்க்கை மேம்போக்காகக் கரடுமுரடானது என்பதை உணர்த்தும் அதன் தோல்.

Updated On : 26 ஏப்ரல், 2020 at 6:32 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:02 PM

ஞானியிடம் ""பழங்களில் ஞானப்பழம் எது'' என்று கேட்டார்கள். "பலாப்பழம்' என்று சட்டென்று அவரிடமிருந்து பதில் வந்தது. ""எப்படி? வாழ்க்கை மேம்போக்காகக் கரடுமுரடானது என்பதை உணர்த்தும் அதன் தோல். பலரும் மேம்போக்காகவே வாழ்ந்து "வாழ்வு முள் மஞ்சம்' என்று வசைபாடுவார்கள். பலாப் பழத்தின் இடைப்பட்ட பகுதியோ சடைப்பின்னலாக இருக்கும். இன்னும் சிலரோ உள்ளே செல்ல முற்பட்டுச் "சிக்கல்கள் நிறைந்தது வாழ்வு' என்று இடையிலேயே சோர்வடைந்து விடுவார்கள். ஒரு சிலர் மட்டும் இன்னும் ஆழமாய் அமிழ்வார்கள். அவர்களுக்கு மட்டுமே சுளைகள் என்னும் சுவையான பகுதி அகப்படும். உள் மையத்திற்குள் சென்று உண்மையான ருசியை உணரத்தூண்டும் பலாப்பழமே தத்துவப்பழம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.