ஞாயிறு கொண்டாட்டம்

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயமாக இருக்கிறது: பூர்ணா

நடிகை பூர்ணாவை திருமண மோசடி கும்பல் ஒன்று ஏமாற்ற முயற்சித்துக் காவல்துறையில் புகார் அளிக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

DIN


நடிகை பூர்ணாவை திருமண மோசடி கும்பல் ஒன்று ஏமாற்ற முயற்சித்துக் காவல்துறையில் புகார் அளிக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பானது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு முதன் முறையாகப் பேட்டியளித்துள்ளார் பூர்ணா. அந்தப் பேட்டியில் அவர்...

""எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அப்போது அறிமுகமானது தான் இந்த மோசடி கும்பல். இரு குடும்பத்தினர் சம்மதம் கிடைத்த நிலையில், நான் திருமணம் செய்ய இருந்தவரிடம் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினேன். பின்பு நடந்த விஷயங்களால் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.

அந்தப் போலி குடும்பத்தினர் பேசிய அன்பான பேச்சுகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த உலகத்தில் யாரை நம்புவதென்றே தெரியாமல் தவிக்கிறேன். ஆகையால், இப்போதைக்குத் திருமணம் குறித்துப் பேசாதீர்கள் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. இந்தச் சம்பவத்திலிருந்து என்னை மீட்க குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். தற்போது நடனத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT