முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஹாலிவுட் நடிகர் மறுமணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் சீன் பென். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


பிரபல ஹாலிவுட் நடிகர் சீன் பென். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். "ஜட்ஜ்மெண்ட் இன் பெர்லின்', "டிராபிக் தண்டர்', "பிபோர் நைட் பால்ஸ்', "மிஸ்டிக் ரிவர்',  "டெட்மேன் வாக்கிங்', "யுடர்ன்' உள்பட பல படங்கள் சீன் பென் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. "இண்டியன் ரன்னர்', "த லாஸ்ட் பேஸ் இண்டு த வைல்ட்' 
உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார். சீன் பென் பிரபல ஹாலிவுட் நடிகை மடோனாவின் முன்னாள் கணவர். இருவரும் 1985-இல் திருமணம் செய்து 1989-இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் 1999-இல் நடிகையும் இயக்குநருமான ராபின் ரைட்டை காதலித்து மணந்து 4 
வருடங்களில் அவரையும் விவாகரத்துச் செய்தார். இந்த நிலையில் லீலா ஜார்ஜ் என்ற 28 வயது இளம் 
நடிகைக்கும் சீன் பென்னுக்கும் காதல் மலர்ந்தது. தற்போது சீன் பென்  லீலா ஜார்ஜை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →