முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கவர்ச்சிக்கு எதிர்ப்பு

அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாகப் பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் "விஸ்வாசம்' படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது.  15 வயதாகும் அனிகா, ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாகப் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். முதலில் கவர்ச்சியான புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் புடவையில் போட்டோஷூட் நடத்தினார். இந்த நிலையில், தற்போது வாழையிலை மட்டும் அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு எதிர்மறையான கருத்துகள் வந்து கொண்டு இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →