முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஒதுங்கியது ஏன்? 

"பிரேமம்' படம் வந்து 5 வருடங்கள் ஆகும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு "பிரேமம்' என்று தான் பெயர் வைத்திருக்கிறார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


"பிரேமம்' படம் வந்து 5 வருடங்கள் ஆகும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு "பிரேமம்' என்று தான் பெயர் வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கையையே மாற்றிய படம் அது. இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது... "பிரேமம்' படத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. கரோனா பிரச்னையைத் தாண்டி இதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் காரணமாகத் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். யாருக்காவது அனுபமாவை தெரியும் என்றால் அதற்கு காரணம் மேரி ஆகத் தான் இருக்கும். அந்தக் கதாப்பாத்திரம் போல வேறு எந்த கதாபாத்திரமும் இவ்வளவு அழுத்தமாக இருக்கவில்லை. ஐந்து வருடம் ஆகிவிட்டது என்பதை கூட என்னால் நம்ப முடியவில்லை. தற்போது மொத்தம் 13 படங்கள் நடித்திருப்பது என அனைத்தும் நடந்திருக்கிறது.நான் நடிக்க விரும்பியது உண்மை தான், நான் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது வாழ்க்கை இது. அதனால் தான் எங்களுடைய வீட்டுக்கு பிரேமம் என பெயர் வைத்திருக்கிறோம். இப்போது  நான் மலையாள சினிமா துறையிலிருந்து விலகி இருக்க முடிவு செய்தேன்.ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொண்டேன், அதன் பிறகு மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அதன் பின் தமிழுக்கு வந்தேன். அப்படியே பயணம் சென்று கொண்டிருக்கிறது' என அனுபமா கூறியிருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →