முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடிகராக  செல்வராகவன்!

"காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


"காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து, "7ஜி ரெயின்போ காலனி', "புதுப்பேட்டை', "ஆயிரத்தில் ஒருவன்', "மயக்கம் என்ன', "இரண்டாம் உலகம்' ஆகிய படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், நடிகராக களமிறங்கியுள்ளார் செல்வராகவன். இளம் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "சாணிக் காயிதம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதந்திர தினத்தன்று இப்படத்தின் "பர்ஸ்ட் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே  "ராக்கி' என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →