மீண்டும் வட சென்னை களம்
பா. ரஞ்சித் படங்கள் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்துவதுண்டு. இந்த வரிசையில் இவர் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் "சார்பட்டா பரம்பரை". ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
பா. ரஞ்சித் படங்கள் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்துவதுண்டு. இந்த வரிசையில் இவர் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் "சார்பட்டா பரம்பரை". ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
துஷாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார்.
பா.ரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா. நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காட்சி அமைப்புக்காக ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடிக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்தான உடற்கட்டோடு நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்கள். இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், மார்ச் இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.