முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மீண்டும் இந்திய மொழிகளில் "கே.ஜி.எஃப்'

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. "கே.ஜி.எஃப் சேப்டர் 1'  படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களான புனித் ராஜ்குமார்,  யஷ் ஆகியோருக்கு பிரம்மாண்ட வெற்றியைத் தேடி தந்த நிறுவனம் ரசிகர்களின் அழுத்தமான முத்திரையை பெற்று வருகிறது.  "கே.ஜி.எஃப்  சேப்டர் 1'  படத்தின் உருவாக்கம், கதைக் கரு, பிரத்யேக அரங்குகள், வருடக் கணக்கில் படப்பிடிப்பு, லட்சக்கணக்கான நடிகர்கள் என இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் கிரகண் தூர். இப்படம் வெளியான 4 நாள்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. தற்போது ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார்  நடித்து வரும் "யுவரத்னா' , "கே.ஜி.எஃப் சேப்டர் 2' என இரு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன.  முந்தைய  பாகத்தை போலவே  "கே.ஜி.எஃப் சேப்டர் 2' அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →