புதிய கனிம பொருள்
மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மொரீஷியஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.