முஜிபுல்லாவின் பெரிய மனது!
லக்னௌ ரயில் நிலையத்தில் கூலியாக பணிபுரிகிறார் 80 வயது முஜிபுல்லா ரஹ்மான். சமீபத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து,
லக்னௌ ரயில் நிலையத்தில் கூலியாக பணிபுரிகிறார் 80 வயது முஜிபுல்லா ரஹ்மான். சமீபத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தங்களது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்று லக்னௌ ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் புலம் பெயர்ந்து வந்த நபர்களின் சுமைகளை வாங்கி, சுமந்து வாசலில் கொண்டுபோய் சேர்க்கிறார். அதற்கு பணம் எதுவும் பெறுவதில்லை. அதுமட்டுமல்ல! சிரமமான ரயில் பயணத்தை முடித்து இறங்கும் இவர்களுக்கு, உணவும், தண்ணீரும் இலவசமாக வழங்கி வருகிறார்.