முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அச்சப்படத் தேவையில்லை!

""கரோனா கொவைட் சுரத்தைப் பற்றி மக்களிடைய பெரிய அச்சமிருக்கிறது. அப்படி அச்சப்படத் தேவையில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

""கரோனா கொவைட் சுரத்தைப் பற்றி மக்களிடைய பெரிய அச்சமிருக்கிறது. அப்படி அச்சப்படத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் "அச்சம் என்பது அறியாமையின் நீண்ட நிழல்' என்று அர்னால்ட். எச். கிளாúஸா என்ற அறிஞர் சொல்லியிருக்கிறார். அதனால் நாம் போக்க வேண்டியது அறியாமைதான். கரோனா வந்தால் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் தேவையில்லை. அப்படியே வந்துவிட்டாலும் விழிப்புணர்வோடு சிந்தித்து எதிர்கொள்வோம். அதற்கு தேவையான மருந்துகளைக் எடுத்துக் கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்ற மனநிலையை அடைய வேண்டும்.

அடுத்து அரசாங்கம் சொல்லக் கூடிய தனிமனித இடைவெளி, முகவுரை, கைக் கழுவுதல் போன்றவற்றை இன்னும் 6 மாதக் காலத்திற்கு நாம் கண்டிப்பாகப் பின்பற்றிய ஆகவேண்டும். யாரிடம் பேசினாலும் 5 அடி தள்ளி நின்று பேசுங்கள்.

தனிமைப்படுத்தல் என்பது உங்களால் மற்றவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற டிரீட்மெண்ட்தான். அதனால் தனிமைப்படுத்த அழைத்துச் சென்றாலும் பயப்படாமல், ஒரு தவக்காலம் போன்று நினைத்துக் கொண்டு கடந்து வாருங்கள்'' என்கிறார் சித்தமருத்துவர் கு.சிவராமன். மேலும் அவர் கூறியதாவது:

முன்பை விட இப்போதுதான் கரோனா குறித்த பயம் மக்களிடைய அதிரிகரித்து வருகிறது. தற்காத்துக் கொள்ள சித்த மருத்துவம் என்ன வழிமுறைகளை சொல்கிறது?

தொற்றின் இயல்பே மெல்ல மெல்ல பரவுவதுதான். அதன்படி இப்போது நமக்கு சமூகப் பரவல் நிலையில் இருப்பதால், எங்குப் பார்த்தாலும் இந்த செய்திகளைக் கேட்பதினால் நமக்கு ஒரு பயம் வருகிறது. மற்றபடி உலகம் முழுக்க நடக்கும் விஷயம்தான் இங்கேயும் நடக்கிறது. அதேசமயம் நாம இங்கே பார்க்க வேண்டியது, மற்ற நாடுகளைக் காட்டிலும், நமக்கு மரணங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு மில்லியனுக்கு 630 - 650 பேர் இறந்து போகிறார்கள். ஆனால், நமது நாட்டைப் பொருத்தவரை, ஒரு மில்லியனுக்கு இன்றைய கணக்கு வரை, 40-45தான். மற்ற வளர்ந்த நாடுகளில் பிறப்பிக்கப்படும் பொதுமுடக்கத்தைவிட, நம் நாட்டில் கடைப்பிடிக்கப்படும் பொதுமுடக்கம் பயனுள்ளதாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்றால், நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் 85 சதவிகிதம் பேர் எந்தவித சிரமுமின்றி குணமாகி வருகிறார்கள் என்றால், ஏதோ ஒரு எதிர்ப்பாற்றால்தான் அவர்களைப் பாதுகாத்து வருகிறது. அந்தப் பாதுகாப்புக் கொடுக்கக் கூடிய எதிர்பாற்றலை "இன்னேட் இம்யூன் சிஸ்டம்' என்று சொல்வோம். அந்த எதிர்ப்பாற்றலின் பின்னணி நமது உணவும், வாழ்வியல்முறையும்தான். எனவே, அந்த உணவும், வாழ்வியலையும் குறித்து சித்தமருத்துவம் என்ன சொல்கிறதோ, அதை இந்தக் காலகட்டத்தில் முறையாக பின்பற்ற வேண்டும் என்றுதான் என்னைப் போன்றோர் சொல்லி வருகிறோம்.

உணவே மருந்து என்பதை இப்போது எல்லோரும் நன்றாக உணர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தக் காலக்கட்டத்துக்கு ஏற்ற உணவுகள் என்ன?

கரோனாவுக்கான எதிர்பாற்றலை கபசுரக் குடிநீர் கொடுக்குமா? இஞ்சி நெல்லிக்காய் கொடுக்குமா என்ற ஆய்வுகள் எதுவும் இன்றுவரை நடக்கவில்லை. ஆனால், கடந்த 2 மாதங்களாக கபசுரக் குடிநீர் போன்றவற்றை கொடுத்து வருகிறோம். இதுவரை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ஏற்படும் நன்மை விளைவுகளை பார்க்கும்போது, நிச்சயமாக ஒரு அடிப்படையான எதிர்பாற்றலை, தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மூலமாகவும், கபசுரக் குடிநீர் போன்ற சித்த மருந்துகளாலும் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

புரதச்சத்து, ஜிங்க் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் டி இவைகள் நிறைந்திருக்கும், கீரைகள், புளிப்பான பழங்கள், சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்கள், காய்கறிகள், வைட்டமின் டி நிறைந்த மோர், பால், மீன்கள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்வதும், வைட்டமின் டி கிடைப்பதற்காக காலை 7- 8 மணி வரையிலும், மாலையில் 4-5 மணி வரையிலும் சூரிய ஒளி படுமாறு நடப்பது போன்றவற்றை கடைப்பிடிக்கலாம். கபசுரக் குடிநீர், அதிமதுரம், ஆடாத்தொடை இவற்றை பயன்படுத்தி பயன் பெறலாம்.

கபசுரக் குடிநீர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

பெரியவர்கள் கபசுர குடிநீர் 60 மில்லி அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். 5 கிராம் பொடியைப் போட்டு 250 மில்லி கிராம் தண்ணீர் விட்டு அதை 60 மில்லிகிராமாக வற்றவிட்டு, பின் வடிக்கட்டி இளஞ்சுட்டுடன் அருந்த வேண்டும். குழந்தைகள் என்றால் 4- 16 வயதுவரை 30 மில்லிகிராம் எடுத்தால் போதும். அதேசமயம், வேறு ஏதாவது உடலில் உபாதைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்.

கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு இது பாதுகாப்பானதா என்ற ஆய்வு இன்னும் வரவில்லை.கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே?

14 நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை வயிற்று புண், கேஸ்டிக், அசிடிட்டி பிரச்னைகள் இருந்தால் ஒருநாள் விட்டு ஒருநாள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது 5 நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஒருசிலருக்கு ஒவ்வாமை இருப்பதாக சொல்லியிருப்பதால், இப்போது வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளாமல், உணவுக்கு பின் எடுத்துக் கொள்ள சொல்கிறோம். லட்சணக்கான மருந்துகள் சித்தமருத்துவத்தில் இருக்கின்றன. அதில் கபசுரக் குடிநீரை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றால் வைரûஸ கட்டுப்படுத்தும், எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை அதில் அதிகம் காணப்படுவதால்தான். அடுத்த வாரங்களில் வைரûஸ எந்தளவு கட்டுப்படுத்துகிறது, எதிர்பாற்றலில் ஐ எல்6 எல்லாம் கூட்டுகிறதா போன்ற ஆய்வுகளின் முடிவு வந்துவிடும். அப்போது நமது தேர்வு சரியானதுதான், இன்னும் எவ்வளவு அளவு, எத்தனை நாள் கொடுக்கலாம் என்பதெல்லாம் தெளிவாக தெரிந்துவிடும்.

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சளி, இருமல் அடிக்கடி ஏற்படும். அதற்கு ஏதேனும் கை வைத்தியம் இருக்கிறதா?

துளசி, வெற்றிலை, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயமாகவோ, சாறு எடுத்தோ கொடுக்கலாம். இதைத்தவிர, துளசி ஒரு கைப்பிடி, 2 வெற்றிலை, 4 மிளகு, வீட்டில் அதிமதுரமும், சித்தரத்தையும் இருந்தால் ஒரு சின்னத் துண்டு அதிமதுரம், சின்னத்துண்டு சித்தரத்தைச் சேர்த்து இடித்து கஷாயம் செய்து கொடுத்தால் சளி இருமல் உடனடியாக குறைந்துவிடும். கட்டுப்படாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கரோனா வந்து மீண்டவர்கள் என்ன மாதிரி உணவுகள் எடுத்துக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்?

சித்த மருத்துவம் பரிந்துரைப்பது நெல்லிக்காய் லேகியம், அமுக்கராங்கிழங்கை சூரணமாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். அமுக்கிராங்கிழங்கு சூரணமாக இருந்தால் மஞ்சள் கலந்த பாலில் அரை தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொள்ளலாம். நெல்லிக்காய் லேகியத்தை சின்ன நெல்லிக்காய் அளவு உருட்டி உண்ணலாம். இது இரண்டையும் 1 மாதத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தால் போதும். வைரல் காய்ச்சல் வந்து போனதால் உடல் பலவீனமாக இருக்கும். அதனால், புரதச் சத்தான உணவுகள், நிறைய பழங்கள், கீரைகள், கீரை சூப், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், முட்டை வெள்ளைக் கரு, அசைவ சூப் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.