இந்தியாவிலிருந்து மூன்று பேர்!
1985- ஆம் ஆண்டு ஜனனமான சினிமா, செஞ்சுரி அடித்த ஆண்டு இது. இதைக் கொண்டாடும் முகமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலை நிறுவனம் "உலக சினிமா சரித்திரம்' என்று 800 பக்கங்கள்
1985- ஆம் ஆண்டு ஜனனமான சினிமா, செஞ்சுரி அடித்த ஆண்டு இது. இதைக் கொண்டாடும் முகமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலை நிறுவனம் "உலக சினிமா சரித்திரம்' என்று 800 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டது.
சினிமா ஆரம்பமான நாளிலிருந்து இன்று வரை 1996- ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் வெளியான முக்கியமான திரைப்படங்களைப் பற்றியும், மற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரது விவரங்கள் அடங்கிய நூல் இது.
இந்நூலில் கடந்த நூறு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உள்ள சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த நூற்று நாற்பது பேர்களின் வரலாறு பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மூன்று பேர் இந்தப் பேரணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
Advertisement
அவர்கள், நடிகர்களில் - எம்.ஜி.ஆர், நடிகைகளில் - நர்கீஸ், இயக்குநர்களில் - சத்யஜித்ரே. தமிழ்ப்பட நடிகரான எம்.ஜி.ஆர். இந்தப் பேரணியில் இடம் பெறுவதன் மூலம் உலகம் முழுவதும் அறிமுகமானது மட்டுமல்ல, உலக சினிமா சரித்திரத்திலேயே அவர் பெயர் நிரந்தரமாகப் பொறிக்கப்படுகிறது.
தமிழ்ப்பட ரசிகர்களாகிய நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.
"மக்கள் தங்கம் எம்.ஜி.ஆர்' என்னும் நூலிலிருந்து