ஞாயிறு கொண்டாட்டம்

பசியால் தவித்த பெண்ணுக்கு பரிசு

ஒரு நாள் மகாராஜா ரஞ்சித் சிங் ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு கல் பறந்து வந்து அவர் மீது விழுந்தது. ஆனால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ராஜிராதா


ஒரு நாள் மகாராஜா ரஞ்சித் சிங் ஒரு மாமரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு கல் பறந்து வந்து அவர் மீது விழுந்தது. ஆனால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
உடனே அருகில் இருந்த வீரர்கள். கல் எறிந்தது யார் என தேடி கண்டுபிடித்து ஒரு பெண்ணை கூட்டி வந்தனர்.
அந்தப் பெண், ""என்னை மன்னிச்சிடுங்க... மகாராஜா. நான் பசியில் இருந்தேன். அதனால் மரத்திலுள்ள ஒரு மாங்காய், விழுந்தால் அதனை சாப்பிடலாமே என கல்லை எறிந்தேன். ஆனால் அது எதிர்பாராத விதமாய் தங்களை தாக்கி விட்டது. என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்'' என மீண்டும் கூறினாள்.
மன்னர்.. உடனே உதவியாளரை அழைத்து கொஞ்சம் பணம் வாங்கி அதனை அந்த பெண்ணிடம்  கொடுத்தார்.
இதனை அருகில் இருந்த பலர் எதிர்பார்க்கவில்லை. கல் எறிந்த பெண்ணுக்கு, பணத்தை கொடுக்கிறாரே இது சரியா? என கேட்டனர். 
அதற்கு மகாராஜா, ""அந்த பெண் பசியில் இருந்தாள். கல்லை மரத்திலுள்ள மாங்காய் மீது தான் எறிந்தாள். பதிலுக்கு மாங்காய் விழுந்திருந்தால் அதனை எடுத்து பசியை ஆற்றிக் கொண்டிருப்பாள். அந்த மரமே, கல் எறிந்த பெண்ணுக்கு மாங்காயை தரும் போது,  மகாராஜா மரத்தை விட உயர்ந்தவர் அல்லவா, அதனால் நான் அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்தேன்'' என்றார். கேள்வி கேட்டவர்கள் வாயை மூடினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT