ஆன் லைன் தியேட்டர்
கரோனா பொது முடக்கம் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறந்தபாடில்லை.இதனால் படத்தை வெளியிடுவதற்கான மாற்று வழிகளை திரையுலகினர் தேடி வருகின்றனர்.
கரோனா பொது முடக்கம் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறந்தபாடில்லை.இதனால் படத்தை வெளியிடுவதற்கான மாற்று வழிகளை திரையுலகினர் தேடி வருகின்றனர். ஓ.டி.டி தளங்களில் மாற்று களமாக வந்துள்ளன. இந்த வரிசையில் ஆன் லைன் தியேட்டர் சேர்ந்துள்ளது. இதில் வெளியாகும் முதல் படம் "ஒன்பது குழி சம்பத்'.
அதென்ன ஆன் லைன் தியேட்டர் என்பது குறித்து பேசுகிறார் படத்தின் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு."அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ் போன்றவை 5000 படங்களைத் தனது பக்கத்தில் வலையேற்றி வைத்திருக்குகிறது.
அதற்கு மாதாமாதம் சந்தா கட்ட வேண்டியது இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த படங்களும் இருக்கும். பிடிக்காத படங்களும் இருக்கும். உங்களுக்கு பிடித்தப் படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அப்படத்தை மட்டும் பார்க்கலாம்.
எளிமையாகச் சொல்லுவதென்றால், எப்படி ஒரு தியேட்டருக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கிறோமோ, அதே போல, ஆன்லைனில் அப்படம் ரிலீஸ் ஆகும் தேதியில், டிக்கெட் எடுத்து, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்க்கலாம். அதனால்தான் இதை ஆன்லைன் தியேட்டர் என்கிறோம்.
கிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்துகொண்டிருக்கும் இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசைமாறிப்போகிறது என்பது "ஒன்பது குழி சம்பத்' படத்தின் கதை. பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி நடிக்கின்றனர்.
ரகுபதி இயக்குகிறார். வரும் 24- ஆம் தேதி படம் வெளியாகிறது.