ஞாயிறு கொண்டாட்டம்

வேதிகாவின் ஆதங்கம்

அர்ஜுன் நடித்த "மதராஸி' படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. பின்பு "முனி', "காளை‘, "பரதேசி', "காவியத்தலைவன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

DIN

அர்ஜுன் நடித்த "மதராஸி' படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. பின்பு "முனி', "காளை‘, "பரதேசி', "காவியத்தலைவன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கிசுகிசு செய்திகள் எழுதுபவர்களைச் சாடியுள்ளார் வேதிகா.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

""சிலர் ஏன் அப்படியான செய்திகளை எழுதுகின்றனர் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துபவை. இப்படி எழுதுபவர்களைப் பற்றி வேறு யாராவது கிசுகிசு எழுதினால் இவர்கள் தாங்கிக் கொள்வார்களா?

எங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. நாங்கள் ஏதாவது மன அழுத்தத்தில் இருக்கலாம், உறவுப் பிரச்னையில் இருக்கலாம், தொழிலில் மோசமான கட்டத்தில் இருக்கலாம். ஆனால், அதெல்லாம் பொழுதுபோக்குக்காக, கவன ஈர்ப்புக்காக செய்தியாக மாறினால், ஒருவரின் சோகத்தையும், வலியையும் வைத்து வருவாய் சம்பாதித்தால், அது மிகவும் முறையற்ற செயல் என்று நான் நினைக்கிறேன். நடிகர் மட்டுமல்ல, எவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அப்படிச் செய்திகள், கிசுகிசுக்கள்  வரக்கூடாது''
இவ்வாறு வேதிகா தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT