முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தானியங்கி இயந்திரம்

ரஷியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ""வேரா'' என்ற தானியங்கி இயந்திரம் இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

ரஷியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ""வேரா'' என்ற தானியங்கி இயந்திரம் இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தானியங்கி இயந்திரம், தற்போது மிகவும் சரியான வகையில் வேலை செய்து வருகிறது. இது இண்டர்வியூ செய்வது மட்டுமில்லாமல், போன் செய்து வேலை தேடுபவர்களை அதுவாக அழைக்கும்.

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த தானியங்கி இயந்திரம் இந்த வேலைகளை எல்லாம் தானாகச் செய்யும். யார் வேண்டுமானாலும் இதை பணம் கொடுத்து வாங்கி பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம். தானியங்கி இயந்திரமான வேரா, தினமும் 1500 பேர் வரை இண்டர்வியூ செய்யும். அவர்களிடம் கேள்வி கேட்டு, அது சரியான பதிலா என்று பரிசோதிக்கும். இது தேர்ந்தெடுக்கும் நபர்கள் எல்லோரும் மிகவும் சரியான திறமைகளுடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. பெண், ஆண் என்ற இரண்டு குரலில் இந்த தானியங்கி இயந்திரம் பேசும். அதேபோல் இது கணினி குரலில் இல்லாமல் சாதாரண மனிதர்களின் குரலிலேயே பேசும்.

இந்த இண்டர்வியூ செய்யும் தானியங்கி இயந்திரம் ஏற்கெனவே ரஷியாவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தினமும் 200 நிறுவனங்கள் இந்த தானியங்கி இயந்திரம் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு ஆள் எடுக்கிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த தானியங்கி இயந்திரம் மூலம் தினமும் 5300 இண்டர்வியூக்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை தேர்வான நபர்களில் 95 சதவிகிதம் பேர் மிகவும் சரியான திறமையுடன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

இதை வேலை வாங்குவது மிகவும் எளிதானது. ஒரு நிறுவனம் அதற்கு ஆள் எடுக்கவேண்டும் என்றால், இந்த தானியங்கி இயந்திரத்திடம் என்ன வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று சொன்னால் போதும் . அதுவே இணையம், அதில் இருக்கும் புத்தகங்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து, என்ன மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யும். பின் அதை வேலை தேடி வரும் நபர்களிடம் கேட்டு சரி செய்து கொள்ளும். நாம் கேட்கும் கேள்விக்கும் தானியங்கி இயந்திரம் பதில் சொல்லும். முக்கியமாக இது இன்னொரு வேலையும் செய்கிறது. அதன்படி வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றால் இதுவே இணையத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருக்கும் நபர்களை தேர்வு செய்து இண்டர்வியூவிற்கு அழைப்பு விடுக்கும். அதாவது நாம் வேலை தேடும் இணையம் எதிலாவது பதிந்து இருந்தால், இந்த தானியங்கி இயந்திரம் அதை கண்டுபிடித்து நம்மை இண்டர்வியூவிற்கு அழைப்பு விடுக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →