முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புதுமுகங்களின் "8-ஆவது சுரம்'

செம்பை சேகர், ஹேமா, பிரசாந்த், ரேகா உள்ளிட்ட புது முகங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் "8-ஆவது சுரம்'.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

செம்பை சேகர், ஹேமா, பிரசாந்த், ரேகா உள்ளிட்ட புது முகங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் "8-ஆவது சுரம்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஐ.எம்.பெருமாள். "" ஆடு மேய்க்கும் இளைஞனை செல்வ செழிப்புமிக்க ஒரு பெண் விரும்புகிறாள். இதை அறிந்த அவளது தாய் மாமன் கொதித்தெழுகிறான். தன் மகனுக்கு மணம் முடித்து அவளது சொத்தை அனுபவிக்கலாம் என்றிருந்த தாய் மாமன் அவளை கொலை செய்து சொத்தை அபகரித்து விடுகிறான். அவளது காதலனோ மனநலம் பாதிக்கப்பட்டு விடுகிறான். அபகரிக்கப்பட்ட சொத்தும் திரும்பப் பெறப்படுகிறது.

இதன் பின்னணிதான் திரைக்கதை. ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம்.  ஒருவரின் வலியை  இன்னொருவர் புரிந்து கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனிதர்களாக  ஆகிறோம் என்பது நம்பிக்கை'' என்கிறார் இயக்குநர். கொடைக்கானல், கோத்தகிரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →