முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகைச்சுவையே விருப்பம்

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "சைலன்ஸ்'.  ஓ.டி.டியில் வெளியாகி இருக்கும் "சைலன்ஸ்' படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்த பேட்டியில் கூறியதாவது..

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:


மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் "சைலன்ஸ்'.  ஓ.டி.டியில் வெளியாகி இருக்கும் "சைலன்ஸ்' படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்த பேட்டியில் கூறியதாவது.. "" பொது முடக்கம் ஆரம்பமானபோது 10 நாட்கள் என்றார்கள்.

குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைத்ததே என்று அனைவரும் சந்தோஷப்பட்டோம். 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது அந்த குடும்பத்தை விட்டு வெளியே வருவோம் என்கிற அளவு பலருக்கு வெறுத்து விட்டது. இப்போது மக்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பலவிதமான உணர்வுகளை அனுபவித்து, அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருகின்றனர். முடக்க காலத்தில் எல்லா படங்களையும் பார்த்துவிட வேண்டும்.

த்ரில்லர், திகில், ஆக்ஷன், மர்மம் என எல்லா வகையான படமும் பார்ப்போம் என்று நினைத்திருப்போம். ஆனால், நாட்கள் ஆக ஆக, உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும், ஏற்கெனவே நீங்கள் பார்த்த "மைக்கேல் மதன காமராஜன்' போன்ற நகைச்சுவைப் படங்களை, மாயாஜாலப் படங்களைப் பார்க்க வேண்டும் என்றே விரும்பியிருப்பீர்கள். எல்லா குடும்பங்களிலும் இது நடந்திருக்கிறது. எனவே பொது முடக்கம் முடிந்து ஆக்ஷன் படமோ, சமூகப் பிரச்னைகளைப் பற்றிய படமோ நான் கொடுக்க விரும்பவில்லை. அது போன்ற படங்கள் வரும், ஆனால் நான் நகைச்சுவையான, மக்களை மகிழ்விக்கும் படத்தையே தர விரும்புகிறேன். '' இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →