திறமை மனிதனுக்கு மட்டுமே உண்டு
மனிதனுக்கு மட்டும்தான் மற்ற உயிர்களின் துன்பத்தை உணரக்கூடிய திறமை இருக்கிறது. அந்தத் திறமையை அவன் மதிக்கலாம்; மதிக்காமல் போகலாம். போற்றலாம். போற்றாமல் போகலாம்.
மனிதனுக்கு மட்டும்தான் மற்ற உயிர்களின் துன்பத்தை உணரக்கூடிய திறமை இருக்கிறது. அந்தத் திறமையை அவன் மதிக்கலாம்; மதிக்காமல் போகலாம். போற்றலாம். போற்றாமல் போகலாம். பொருட்படுத்தாமல் கூடப் புறக்கணிக்கலாம். தன்னுடைய இயலாமையால் மற்ற உயிரின் துன்பத்தை உணராதது போல கூட நடிக்கலாம். எது எப்படி இருந்தாலும் மற்ற உயிர்களின் துன்பத்தை உணரக்கூடிய திறமை மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற மனிதனால் மட்டுமே பாட முடியும்
- டாக்டர் பொற்கோ,
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.