புதிய பிளாஸ்டிக்
உலகம் எங்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
உலகம் எங்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தயாரிப்புகள் மலிவானவை மற்றும் பயன்படுத்த மிகவும் இலகுவானவை என்றாலும், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜெர்மன் விஞ்ஞானிகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத புதிய பிளாஸ்டிக் பொருளை கண்டுபிடித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தாவர எண்ணெய் அடிப்படையிலான பிளாஸ்டிக்கை 10 முறை வரை மறுசுழற்சி செய்யலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் ஜெர்மனியில் உள்ள கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொருட்கள் அறிவியல் துறைத் தலைவரான ஸ்டீபன் மெக்கிங்கால் உருவாக்கப்பட்டது. புதிய பிளாஸ்டிக் பொருளின் கண்டுபிடிப்புகள் பற்றி "நேச்சர்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பிளாஸ்டிக் தாவர எண்ணெய்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதே கண்டுபிடிப்பை மிகவும் தனித்துவமானதாக மாற்றியுள்ளது. இது தற்போதுள்ள புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான பிளாஸ்டிக்குகளுக்கு சுற்றுச்சூழல் நட்பு மாற்றாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய பிளாஸ்டிக் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக்கோடு பொருந்தக்
கூடிய பல அம்சங்களுடன் பாலிதீன் போன்ற அடர்த்தியைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இதை சிறந்த பயனுள்ள விகிதத்தில் எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இருப்பினும், இந்த தாவர எண்ணெய் அடிப்படையிலான பிளாஸ்டிக் பொதுவாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் பின்னடைவு அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், வேதியியல் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் பொதுவான எத்திலீனை விட இது விலை அதிகம். மேலும் தொழில்களை ஒரு விலையுயர்ந்த பிளாஸ்டிக் மாற்றுகளுக்கு மாறுவது என்பது மிகவும் கடினம்.
Advertisement