ஞாயிறு கொண்டாட்டம்

நான்கு நாயகிகள்

சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

DIN

சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர். வித்தியாசமான தோற்றத்தில் ஜான் விஜய் நடிக்கிறார். கதையின் நாயகனாக எஸ்.எஸ்.பிரபு அறிமுகமாகிறார். அமெரிக்காவில் ஆங்கிலப்படம் மற்றும் டெலி பிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜையில், "மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இன்னும் பெயரிடப்படவில்லை. ஸ்டண்ட் - எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடன இயக்குநராக சங்கர் பணியாற்றுகிறார். படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT