ஞாயிறு கொண்டாட்டம்

இரட்டை வேடம்

அறிமுக இயக்குநர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்குமார் நடிக்கும் படம் "“பேச்சிலர்'.

DIN


அறிமுக இயக்குநர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்குமார் நடிக்கும் படம் "“பேச்சிலர்'.  சமீபமாக வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த டீசர் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. படம் பற்றி இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது.... "" கோவையில் இருந்து பெங்களூர் சென்று ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறுக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப்படம்.  பிரகாஷ்குமார் இப்படத்தில் இரு விதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் அழகுடன் செதுக்கியுள்ளார்.  இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை. திவ்யபாரதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்'' இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT