ஞாயிறு கொண்டாட்டம்

அர்ஜுன நிருத்தம்

படத்தில் உள்ள காட்சியைப் பார்த்தால் கதகளி போல் தோன்றுகிறதா?உண்மையில் இதன் பெயர் அர்ஜுன நிருத்தம்!

DIN

படத்தில் உள்ள காட்சியைப் பார்த்தால் கதகளி போல் தோன்றுகிறதா?
உண்மையில் இதன் பெயர் அர்ஜுன நிருத்தம்!
இந்த நடனத்திற்கு இன்று குருவாக இருந்து குழுவினருடன் தொடர்ந்து நடத்தி வருபவர் படத்தில் காணும் குறிஞ்சி நடேசன் பாலமோட்டில்!
இவர் தனது 15-ஆவது வயதில் தனது தந்தையிடம் சிஷ்யனாக சேர்ந்து கற்றவர்.
இந்த நடனக்குழுவில் அனைவருமே ஆண்கள். அதுமட்டுமல்ல இந்த நடனம் பகவதி அம்மன் கோயில்களில் மட்டுமே நடக்கும்.
ஒரு சமயம் பாண்டவர்களின் தாயார் குந்தி, தனது மகன்கள், அஞ்ஞாத வாசம் செல்ல வேண்டும் என கேள்விப்பட்டவுடன் காளியிடம்," என் மகன்கள் அதனை நல்லதெம்புடன் முடித்துத் திரும்ப நீ தான் உதவ வேண்டும். இதற்கு நீ உதவினால் நன்றியாக ஒரு பலி தருவேன்'. என வேண்டினாள்.
பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடிந்து நாட்டைத் திருப்பிக் கேட்ட போது தராததால், கெளரவர்களுடன் சண்டையிட்டு ஜெயித்து, யுதிஷ்டிரர் தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தனர்.
ஆனால் குந்தியோ, காளிக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்தே போனாள்.
காளி, நாரதரை அனுப்பி யுதிஷ்டிரரிடம் கூறும்படி செய்தாள்.
விஷயம் குந்திக்கு தெரியவர, யாரை பலி கொடுப்பது என திகைத்தாள். 
அப்போது அர்ஜுனன் தானே தன் உயிரை பலி கொடுக்க முன் வந்தான்.
அதற்காக ஒரு தேரில் ஏறி கிளம்பிய போது தேவர்கள் அவனுடைய செய்கையை கண்டு வியந்து அர்ஜுனனுக்கு , மயில் இறகுகள் மற்றும் இந்திரனின் கீரிடத்தை கொடுத்தனர்.
அர்ஜுனன் மயில் இறகுகளை இடுப்பில் கட்டி தலையில் கீரிடத்தை அணிந்து கொண்டு தேரில் காளியை காணச் சென்றான்.
அர்ஜுனனின் தியாகம், காளியை வியப்பில் ஆழ்த்தியது.
அதனால் அர்ஜுனனின் பலியை தடுத்து மாறாக அவனை ஆசிர்வாதம் செய்தாள். இதனால் மகிழ்ந்த அர்ஜுனன் இடுப்பில் மயில் இறகுகளுடனும் தலையில் கீரிடத்துடனும் நடனம் ஆடினான். இந்த நடனம் "அர்ஜுன நிருத்தம்' என்றானது. 
இதனை காளியிடம் பக்தர்கள் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியதும், தாங்களே முழு செலவையும் ஏற்று இந்நடனத்தை ஆடச் செய்வார்கள்.
குறிஞ்சி நடேசன் குழுவினர், அர்ஜுனன் போலவே தேரில் வந்து இறங்குவார். பகவதியை கையெடுத்து கும்பிட்டு விட்டு பிறகே நடனத்தை துவக்குவர். 
நீலப்பச்சை நிறம் கொண்ட ரத்தினக்கல் வண்ணத்தை முகத்தில் பூசி, தலையில் இருபக்கமும் சரிந்து நிற்கும் வளைவு கொண்ட கீரிடத்தை அணிந்து கொண்டு ஆடுவர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT