பெயர் மாறிய புத்தர்
வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் என்னுமிடத்தில் ஒரு தனியார் தோப்பு ஒன்றில் அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது.
வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் என்னுமிடத்தில் ஒரு தனியார் தோப்பு ஒன்றில் அமர்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் என சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர். இது சுயம்பு, அசைக்க முடியாது எனவும் இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இதே போல் முசிறி வட்டத்தில் மங்கலம் என்ற ஒரு சிற்றுர் உள்ளது. இங்குள்ள அரவாண்டியம்மன் கோயிலில் தனியாக ஒரு புத்தர் சிலை உள்ளது. இதனையும் இந்த ஊர் மக்கள் செட்டியார் என்றே அழைக்கின்றனர்.
மேலும் மன்னார்குடி மதுக்கூர் அருகே விக்ரமம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள புத்தர் சிலையையும் செட்டியார் என அழைக்கின்றனர். புதிய வேலையை தொடங்கும் முன் இவரிடம் வேண்டிக் கொண்டால் பலிதமாக்கித் தந்து விடுவார் என்பது நம்பிக்கை. இதனால் புத்தரை இங்கு ஆர்வமாக கும்பிடுகின்றனர்.
Advertisement
திருவாரூர் அருகே திருநெல்லிக்காவல் பகுதியில் புதூர் என ஒரு சிற்றார் உள்ளது. இங்கு தான் இவரை புத்தர் என அழைக்கின்றனர். இவரை தற்போது அரசமரத்தடியில் அமர்த்தி வழிபடுகின்றனர்.