முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சுதந்திர இசைக்கு வெளிச்சம்

இசையமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

இசையமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஆல்பம் முதல் சினிமா படங்கள் வரை இசை அமைப்பது, பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என்று அமோக வளர்ச்சியில் இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு, நட்பே துணை, சிவகுமாரின் சபதம், அன்பறிவு உள்ளிட்ட படங்களுக்கு பரவலான வரவேற்பு எழுந்தது. தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கி வரும் வீரன் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்காக குதிரை ஏற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை கற்று வருகிறார். 

அந்த குதிரையின் பெயர் ரீகன். இந்த நிலையில் மற்றுமொரு முயற்சியாக ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள சின்ன பையன் என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பம் மூலம் தொடர்ந்து சுதந்திர இசை கலைஞர்களை பெருவாரியான ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் அடுத்தடுத்து சுயாதீன ஆல்பம் வெளியிட ஹிப்ஹாப் தமிழா ஆதி முடிவு செய்துள்ளார். "" என் வாழ்க்கையின் பெரிய ஆச்சர்யப் பரிசு இந்த இடம்.  பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் வந்தேன். ஆனால், நான் செய்த வேலைகள் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. எல்லாமே அவர்கள் கொடுத்ததுதான். 

அடுத்து என்னை போலவே மேலே வர முயற்சிக்கும் இசைக் கலைஞர்களை இதன் மூலம் வெளிச்சம்  போட்டு காட்டுவேன்.  இது ரசிகர்கள் எனக்கு கொடுத்த உயரத்துக்கு செய்யும் நன்றி கடன் என்று கூடச் சொல்லலாம்'' என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.