முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மாளவிகா கோபம்

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருபவர் மாளவிகா மோகனன். இதுபோல் ஒரு கிளாமர் போட்டோவை அவர் வெளியிட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:


அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருபவர் மாளவிகா மோகனன். இதுபோல் ஒரு கிளாமர் போட்டோவை அவர் வெளியிட்டார். உடனே ஒரு சிலர் அதை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வெளியிட்டனர். இதனால் கோபம் அடைந்த மாளவிகா, ""நேர்மை என ஒன்று இருக்கிறது. அதை எப்படி மீறி இதுபோல் செய்யலாம்? நிஜத்தில் நான் அதுபோல் புகைப்படம் எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது, எப்படி என்னை ஆபாசமாக சித்தரிக்கலாம். மனசாட்சிப்படி நடந்துகொள்ள முடியாவிட்டால், எதையும் தவறாக வெளியிட்டு காசு பார்க்க நினைக்க வேண்டாம். என் வரன்முறை என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். அதன்படிதான் நான் நடந்துகொள்கிறேன். அதையெல்லாம் நான் மீறுவதாக இருந்தால் எனது குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்'' என ஆவேசமாக கூறியிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.