3 நாள்கள் தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
தொடர் விடுமுறை எதிரொலியாக உள்நாட்டு விமானங்களுக்கான விமான கட்டணங்கள்,சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்தது குறித்து..
சென்னை: புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை, வார விடுமுறை என தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் எதிரொலியாக உள்நாட்டு விமானங்களுக்கான விமான கட்டணங்கள்,சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சனி, ஞாயிறு தொடா் விடுமுறை ஒருபுறமிருக்க புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் மூன்று நாள்கள் தொடர் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், வியாழக்கிழமை மாலை முதல் தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டனா்.
Advertisement
Advertisement
பேருந்துகள், ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், ஏராளமானோா் வியாழக்கிழமை விமானம் மூலம் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வதற்கு விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.
அதிகயளவிலான பயணிகள் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததால், சென்னையில் இருந்து கோவைக்கு வரும் விமானங்கள் வியாழக்கிழமை விமான கட்டணங்களை பல மடங்காக உயர்ந்தியுள்ளன.
இந்த நிலையில், சென்னை - கோவை இடையே ரூ. 4,966 ஆக இருந்த கட்டணம் ரூ. 16, 496 ஆக உயர்ந்து உள்ளது.
ஏற்கனவே விமான எரிபொருள் விலை அதிகரித்து இருப்பதால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தொடர் விடுமுறை என்பதால் உள்நாட்டு விமான கட்டணங்கள், சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Impact of 3-Day Consecutive Holiday....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.