முகப்பு
அழகிய இல்லம்

பேக்கிங் சோடா செய்யும் மாயாஜாலம்! சமையல் முதல் அழகு வரை!

பேக்கிங் சோடா செய்யும் மாயாஜாலம் மூலம் சமையல் முதல் அழகு வரை ஜொலிக்கலாம்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:08 AM
பேக்கிங் சோடா - Center-Center-Kochi
பகிர்:

பேக்கிங் சோடா முகத்துக்கான மிகச்சிறந்த ஸ்கிரப்பராகவும் பயன்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. சில ஸ்பூன்கள் பேக்கிங் சோடாவை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரால் முகத்திலடித்து முகத்தைக் கழுவி துடைக்காமல் அப்படியே உலர வைத்து விட்டால் தண்ணீரில் கரைந்திருக்கும் பேக்கிங் சோடா முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தைப் பொலிவானதாக மாற்றி விடத்தக்கதாம்.

பற்களில் கறை படிந்தவர்கள் எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டிருப்பார்கள். அதற்கு ஒருசிறந்த நிவாரணம் பிழிந்தெடுத்த எலுமிச்சைச் சாறு அல்லது தண்ணீரில் பேக்கிங் சோடாவைக் கலந்து பேஸ்ட் போன்ற பதம் வந்ததும். அதை அப்படியே டூத்பிரஷ் உதவியுடன் பற்களில் தடவி 1 சில நிமிடங்களில் தேய்த்துக் கழுவி வாய் கொப்பளித்தால் பற்கள் முன்னை விடப் பொலிவானதாகவும் கூடுதல் வெண்மையானதாகவும் காட்சியளிக்கும்.

ஈராமாக இருக்கும் மெத்தைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் போக்கும் தன்மை பேக்கிங் சோடாவுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

பேக்கிங் சோடாவை அப்படியே மெத்தையில் முழுதாகத் தடவும் போது அது மிகச்சிறந்த நாற்ற நீக்கியாகவும் பயன்படுகிறது.

கூடுதலாக இதனுடன் சில துளிகள் லாவண்டர் அல்லது ஜாஸ்மின் பெர்ஃப்யூம் சேர்த்துக் கொண்டால் மெத்தையிலிருந்து புத்துணர்ச்சியான வாசமும் கிடைக்கும்.

பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து அதில் தங்க நகைகளை சற்று நேரம் ஊற வைத்து தேய்த்துக் கழுவினால் போதும் நகைகள் புதியது போலப் பள பளக்கும்

வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் ஓவன்களைக் கூட பேக்கிங் சோடா கொண்டு அருமையாகச் சுத்தப்படுத்தலாம். பேக்கிங் சோடா கலந்த நீரை ஓவன்களில் விடாப்பிடிக் கறைகள் ஒட்டிக் கொண்டிருக்கும் பகுதிகளில் தெளித்து ஊற வைத்து சற்று நேரம் கழித்து தேய்த்துக் கழுவும் போது ஓவனில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் முடை நாற்றமும், விடாப்பிடி கறைகளும் கூட மறைந்து விடும்.

கூந்தலுக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்கையில் ஷாம்பூவைத் தலையில் தேய்ப்பதற்கு முன்பு சிறிதளவு பேக்கிங் சோடாவை கையில் தெளித்துக் கொண்டு அதன் மேல் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பூவையும் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைமுடி சிக்கு விழும் அவஸ்தையிலிருந்து மீளும். மேலும் வறண்ட கூந்தலை பட்டுப்போன்ற மென்மையான கூந்தலாக மாற்றும் சக்தியும் பேக்கிங் சோடாவுக்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.