முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழுக்கு வரும் கன்னட சினிமா

கன்னடத்தில் இருந்து இந்தியா முழுமைக்குமான படங்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:


கன்னடத்தில் இருந்து இந்தியா முழுமைக்குமான படங்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கேஜிஎஃப் -2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ள படம் "777 சார்லி'. சார்லி என்ற நாய்க்குட்டி, அதன் நண்பன் தர்மாவின் அன்பான உலகத்தை படம் பிடிக்கும் விதமாக உருவாகி வரும் படம் இது. கன்னடத்தில் வளர்ந்து வரும் ரக்ஷித் ஷெட்டி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கிரண்ராஜ் எழுதி இயக்குகிறார். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழில் வெளியிடுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது...""கரோனாவுக்குப் பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட சினிமா துறையுடன் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். ரக்ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்தப் படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குநர் கிரண்ராஜிக்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம். நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை இந்தப் படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை. இந்தப் படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.