முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

10 வருடங்களுக்குப் பின் தேவாவின் இசை

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் "அமைச்சர் ரிட்டன்ஸ்'. டி.ஜெயலக்ஷ்மி கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்கி  நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் "அமைச்சர் ரிட்டன்ஸ்'. டி.ஜெயலக்ஷ்மி கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்கி  நடித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி, சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.  நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா..... ""நான் இசையமைத்து 10 வருடங்கள் ஆகிறது. அதற்குக் காரணம் என் உடல் நிலை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்ததுதான். இப்போதுள்ள இசையமைப்பாளர்களின் பாடல்கள் புரியவில்லை என்று சிலர் சொல்வார்கள். அதாவது தங்களுக்கு வாய்ப்பில்லை என்றால் இதுபோல சொல்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை இந்தக் காலத்துக்கு ஏற்ப அவர்கள் இசையமைக்கிறார்கள். அவர்களும் நன்றாகவே இசையமைக்கிறார்கள். என்னிடம் இப்போது இசையமைக்க சொன்னால், என் பாணியில் மெலோடி பாடல்கள் போடுவேன், அதேபோல் இப்போதைக்கு ரசிகர்களின் பேவரைட் என்ன, லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்படி பாடல் போட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பது தான் உண்மை. எனவே காலத்துக்கு ஏற்ப இசையை  மாற்றிக்கொடுக்க வேண்டும். 

அப்படிதான் இந்தப் படத்தில் ஒரு பாடல் செய்திருக்கிறேன்'' என்று பேசினார் தேவா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.