புகைப்பட கலைஞரான நடிகை
"மாஸ்டர்' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது தனுசுடன் "மாறன்' படத்தில் வருகிறார்.
"மாஸ்டர்' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது தனுசுடன் "மாறன்' படத்தில் வருகிறார். சமீபத்தில் நீலகிரிலுள்ள மசினகுடிக்கு சுற்றுலா சென்றவர் அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். "புகைப்படம் எடுப்பது என்பது என்னோட தொடர்புடைய கலை. காரணம் என்னுடைய அப்பா ஒளிப்பதிவாளர். தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நான் நடிக்க இருக்கும் தமிழ்-தெலுங்கு படங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளன' என்றார்.