முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கூகுள் குட்டப்பா

ஆர்.கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மெண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் படம் "கூகுள் குட்டப்பா'. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:


ஆர்.கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மெண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் படம் "கூகுள் குட்டப்பா'. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

"கூகுள் குட்டப்பா'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில்.... ""இயக்குநராக, நடிகராக இருந்த என்னை கமல்ஹாசன் தான் "தெனாலி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார். இதற்கு ரஜினிகாந்த் பெரிதும் உதவி புரிந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு "கூகுள் குட்டப்பா'  படத்தை தயாரித்திருக்கிறேன். என்னிடம் உதவியாளராக பணியாற்றும் சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோருக்காக மலையாளத்தில் வெளியான "ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, "கூகுள் குட்டப்பா' வை உருவாக்கி இருக்கிறோம்.  அந்த ரோபோவை உருவாக்கி படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிட உதவிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.