முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பரம்பரை  போராட்டம்

ஆர்.ஜி.மீடியா  சார்பில் ராபின்சன்  தயாரித்துள்ள படம்  "கடலை போட ஒரு பொண்ணு வேணும்' .

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

ஆர்.ஜி.மீடியா  சார்பில் ராபின்சன்  தயாரித்துள்ள படம்  "கடலை போட ஒரு பொண்ணு வேணும்' . இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். இனியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,  காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

வளர்ந்து வரும் இன்றைய சூழலில் எல்லோரிடமும் செல்போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.  

தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். தான்  பல பெண்களிடம் காதலை சொல்லி தோல்வி அடைகிறார். இவர் கடைசியாக ஒரு பெண்ணை பின் தொடர்ந்து  தன்னுடைய காதலை தெரிவிக்கின்றார். அவர் பதிலை  செல்போனில் தெரிவிப்பதாக கூற. சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார். இதிலிருந்து அவர்  மீண்டாரா? காதலி பதில்  என்ன ஆனது, இறுதியில்  தனது குடும்பத்தின் சாபத்தை நீக்கினாரா என்பதுதான் படத்தின் கதை. என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.