ஞாயிறு கொண்டாட்டம்

கார்களில் சாதனை!

அமீரகத்தில் இந்தியாவில் செய்யப்படும் டாடா, மாருதி சுசுகி கார்களைப் பார்க்க முடியாது.

பனுஜா

அமீரகத்தில் இந்தியாவில் செய்யப்படும் டாடா, மாருதி சுசுகி கார்களைப் பார்க்க முடியாது. ஆனால் அமீரகத்தின் ராஜ குடும்பத்தைத் சேர்ந்த  ஷேக்  ஹம்தன் என்பவருக்கு பழைய மாருதி 800 ரக  கார் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. மாருதி 800 அளவிலும்  உருவத்திலும்  சின்ன கார். அதனால் ஷேக்  இரண்டு மாருதி கார்களை வைத்து புதுமை செய்திருக்கிறார். 

இரண்டு மாருதி 800 கார்களை பக்கவாட்டில்  வெல்டிங்   செய்து இணைத்து ஒரே நேரத்தில்  8  பேர்கள்  பயணிக்கக் கூடிய  காராக  மாற்றியுள்ளார். ஷேக் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அகலம் அதிகமாக இருக்கும்  இந்த இரட்டை மாருதி 800  காரை சாலைகளில் ஓட்ட  அனுமதி  கிடைத்துவிடும்.

அமீரகத்தில் சாலைகள்  மிகவும் அகலமானவை  என்பதால் இந்த இரட்டை மாருதி கார் சாலையில் ஓடும்போது  போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இந்த இரட்டைக் கார்,   கார் கண்காட்சிகளிலும்  பங்கெடுக்குமாம்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய தீயே... ராஷி சிங்!

போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

SCROLL FOR NEXT