முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மாணவர்கள் வெற்றி பெற...

ஆசிரியர்களும் பெற்றோர்களும் இடையே உருவாக வேண்டிய நல்ல உறவானது மாணவர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் முக்கிய அம்சமாகும்.

Updated On : 29 மே, 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:53 PM

ஆசிரியர்களும் பெற்றோர்களும் இடையே உருவாக வேண்டிய நல்ல உறவானது மாணவர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் முக்கிய அம்சமாகும்.

மாணவர்கள் கல்வியில் மேம்பட பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்று    வேலூர் சிருஷ்டி பள்ளிக் குழும முதல்வர் - எம்.எஸ்.சரவணனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது;

பெற்றோர்களின் வேலைப்பளுக்கிடையே அவர்களை தொந்தரவு செய்யாமல் குறுஞ்செய்திகள்,  மின்னஞ்சல்கள் மூலமாகவோ தொடர்புக் கொள்ளலாம். தேவைப்படின், அலைபேசியில் பெற்றோரை அழைத்துப் பேசுவதே சிறந்தது.

Advertisement

நல்ல கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வதை ஆசிரியர்கள் வழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

கரோனா காலத்துக்குப் பின்னர்,  இப்போது மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி "வாட்ஸ் ஆப்' குழுக்கள் வகுப்புகள் வாரியாக உருவாக்கப்பட்டுள்ளன. வகுப்பில் மாணவர்கள் படிக்கும் புகைப்படங்கள் எடுத்துக் கூட அவர்களது பெற்றோர்களுக்கு அனுப்பலாம்.  இது பெற்றோர்களுக்கு  நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, கல்வி வளர்ச்சிக்குத் தக்க ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்படி செய்யும்.  மாணவர்களும் இத்தகைய செயல்களின் மூலம் தங்கள் கற்றல் சூழலைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வகுப்பில் உற்சாகமாகப் பங்குபெறுவார்கள்.

ஆசிரியர்-பெற்றோர்களுக்குமான தொடர்பானது ஒரு போலியான பாசாங்காக இல்லாமல்,  நேர்மையானதாக இருப்பது அவசியம்.

மாணவர்களின் குடும்பச் சூழலை குறித்து கவனித்து, முடிந்த உதவிகளை செய்ய ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். அப்போது மாணவர்கள் மற்ற கஷ்டங்களின்றி தங்கள் முழு கவனத்தையும் படிப்பதில் செலுத்துவார்கள்.

பொருளாதாரம் சார்ந்த அணுகுமுறை என்பது மாணவர்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்புக்கான சிறந்த ஒரு வழி. இந்த அணுகுமுறையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கலந்தாலோசிப்பது பெற்றோர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் தீரும்.

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நடுவே ஒற்றுமையான சூழல் உண்டாகும்போது,  மாணவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.  எந்த குழப்பச் சிக்கல்களின்றி வகுப்பறை மேம்பாட்டில் கவனம் செலுத்த முடியும் என்றார் சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.