முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அதிவேக மங்கை

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், 2 வெள்ளியுடன் அதிவேக மங்கை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் தமிழகத்தின் தடகள வீராங்கனை அர்ச்சனா.

Updated On : 16 அக்டோபர், 2022 at 5:47 PM
பகிர்:


தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், 2 வெள்ளியுடன் அதிவேக மங்கை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் தமிழகத்தின் தடகள வீராங்கனை அர்ச்சனா.

மதுரையைச் சேர்ந்த விவசாயி சுசீந்திரன் மகளான அர்ச்சனா 1994-இல் பிறந்தார். சிறுவயது முதலே தனது மகளை சிறந்த தடகள வீராங்கனையாக ஆக்க வேண்டும் என சுசீந்திரன் இலக்கோடு செயல்பட்டார். அதற்கேற்ப அர்ச்சனாவும் ஆர்வம் காண்பித்தது பலனை அளித்தது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2019-இல் காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் 100 மீ. ஓட்டத்தில் 11.80 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று சாம்பியன் ஆனார். 

Advertisement

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற 36-ஆவது தேசிய விளையாட்டுப் 200 மீ. பிரிவில் 11.41 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கமும், 100 மீ., 400 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்துடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார் அர்ச்சனா. 

அவரிடம் ஓர் சந்திப்பு:

அடுத்த இலக்கு என்ன?

சீனாவில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிகளுக்கு தகுதி பெற்று தங்கம் வெல்ல வேண்டும். 

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் சாம்பியன் ஆனதுக்கு பின் தடகளத்தில் நிலைமை?

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் சாம்பியன் ஆன நிலையில் தடகளத்தில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.