முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விளக்குகளின் நகரம்..!

வியத்நாமின் மத்திய கடற்கரை பகுதி சார்ந்த ஒரு மிக பழங்கால நகரம் மேஹாய் ஆன். டா நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கட்டடங்களைக் காண முடியும்.

Updated On : 16 ஏப்ரல், 2023 at 12:00 AM
பகிர்:

வியத்நாமின் மத்திய கடற்கரை பகுதி சார்ந்த ஒரு மிக பழங்கால நகரம் மேஹாய் ஆன். டா நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கட்டடங்களைக் காண முடியும்.
16-ஆம்  நூற்றாண்டில் தென் சீனக் கடலில் ஒரு பெரிய துறைமுகம் மேஹாய் ஆன். அத்துடன் நல்ல வர்த்தக மையமும் கூட! தௌ பொன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரை வியத்நாமை "மினி வெனிஸ்'  என அழைப்பர். இங்குள்ள ஆற்றில் படகு சவாரி அதிகம்.
இங்குள்ள 900 கட்டடங்களைப் பார்க்க 6 டாலர் கட்டணம். ஆனால், 5 கட்டடங்களை மட்டுமே காண முடியும். அடுத்த நாள் அதே நுழைவுச் சீட்டில் மேலும் 5 கட்டடங்களைக் காணலாம்.
1593-இல் இந்தப் பகுதி ஜப்பான் நாட்டின் ஆளுகையில் இருந்தது. அப்போது, தௌ பொன் நதி ஓரிடத்தில் ஊரை இரு பகுதியாகப் பிரித்தது.  அந்த இரு பகுதிகளையும் அன்றைய ஜப்பானியப் படை ஒரு பாலம் மூலம் இணைத்தது. அதனை உள்ளே சென்று  களிக்க நுழைவுக் கட்டணம் உண்டு. நடுவில் ஜப்பானியர்கள் கட்டிய புத்த விஹாரும் உண்டு.
1653-இல் இந்தப் பகுதி சீனர்கள் வசம் வந்தது. அவர்கள் கட்டிய கோயில் இன்றும் உள்ளது.  அதில், புத்தர், சீடர்கள், பல வெண்கலச் சிலைகள், மணிகளையும் காணலாம்.
இந்தக் கோயிலுக்குச் சென்று உங்கள் விருப்பத்தை எழுதிப் போடலாம். ஆண்டுக்கு ஒருமுறை  அவற்றில் கையில் வந்த சீட்டை எடுத்து, அந்த விருப்பம் நிறைவேற அங்கிருப்போர் பிரார்த்திப்பர்.
இங்கு ஒவ்வொரு பௌர்ணமியும் விசேஷமாகும். அன்று காகித வண்ண விளக்குகள் ஊர் முழுவதும் ஏற்றப்பட்டு, ஜெகஜோதியாய் இருக்கும். நதியில் இப்படி விளக்கேற்றி பிரார்த்திச் செல்ல விடுவர். பௌர்ணமி நாள்களில் படகுசவாரி விசேஷமாகும்.  
யுனெஸ்கோ இதனை 1998-இல் பாராம்பரிய நகரமாக ஏற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.