முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிலைக் கடத்தல் பின்னணியில் 'பரம்பொருள்'

கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பரம்பொருள்'.

Updated On : 20 ஆகஸ்ட், 2023 at 12:00 AM
பகிர்:

கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பரம்பொருள்'.  சரத்குமார்,  அமிதாஷ், காஷ்மீரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அரவிந்த் ராஜ் இப்படத்தின் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""விழுப்புரம் பக்க ஆற்றுப் படுகையில் கிடந்த ராட்சத பாம்பின் படிமங்கள்... கரூர் கலெக்டர் ஆபீஸ் பக்கம் கிடைத்த சோழர் கால நாணயங்கள்..... திருவாரூர் பக்கம் குக்கிராம் ஒன்றில் கிடைத்த புத்தர் சிலைகளுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்... செஞ்சி ஆற்றங்கரையில் கிடைத்தது உண்மையிலேயே டைனோசர் முட்டைகள்தானா... கொள்ளிடம் அருகே ஒரே இடத்தில் கிடைத்த ஏராளமான முதுமக்கள் தாழிக்குள்  என்ன இருந்திருக்கும். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு வர இப்போதும் இந்திய வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்... அன்றாட அரசியல் நிகழ்வுகளைத் தவிர்த்து நம் மூளைக்குள் தினம்தோறும் கொலாஜ் ஆகிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை.  அது மாதிரியான ஒரு சராசரி மனிதனின் வாழ்வுதான் கதை. இதை நம் சம காலத் தமிழ்ச் சூழலில் வைத்து பார்த்தேன். அதிலுள்ள முகமூடிகளை எளிமையான சகல மனிதர்களுக்கும் போய் சேர்க்கும் முயற்சியாக கை சேர்ந்திருக்கிறது'' என்றார்.  இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.