ஞாயிறு கொண்டாட்டம்

அகோரியாக சாயாஜி ஷிண்டே

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் வளர்ந்திருப்பவர் சித்து. இவர் நடித்த "திருமணம்', "ராஜா ராணி' போன்ற தொடர்கள் கவனம் பெற்றவை.

DIN

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் வளர்ந்திருப்பவர் சித்து. இவர் நடித்த "திருமணம்', "ராஜா ராணி' போன்ற தொடர்கள் கவனம் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "அகோரி'. "பாரதி' படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை. இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து  அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன.

படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும். தெலுங்கில் "சஹா'படத்தின் மூலம்  புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார்.  நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். மைம் கோபி,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்கிறார்கள். ஒளிப்பதிவு - வசந்த்.  இசை ஃபோர் - மியூசிக். கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக்குமார் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தைத் திரையரங்குகளில் பி. வி. ஆர்.  சினிமாஸ் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT